மதுரை :பெரியகுளம் அருகே, ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவான வழக்கில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ராஜாவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை, நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது. பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி நாகமுத்து, 21. இவர், டிச.,7 ல் தற்கொலை செய்துகொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா, டி.கள்ளிப்பட்டி பாண்டி உட்பட சிலர் மீது, தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பொய் புகார் அடிப்படையில், அரசியல் காரணங்களுக்காக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆதலால், முன்ஜாமின் வழங்க வேண்டும் என, ராஜா,பாண்டி,சிவகுமார்,லோகு, சரவணன் ஆகியோர், மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல், ஆர்.காந்தி ஆஜரானார். ராஜா, பாண்டி, நான்கு வாரங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராக வேண்டும். மற்றவர்கள், இரண்டு வாரங்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.