சென்னை :சென்னை, தி.நகர், பனகல் பூங்கா அருகில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும், மாநகராட்சியின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தி.நகர், பனகல் பூங்கா எதிரில், பாஷ்யம் தெருவில் உள்ள காலியிடத்தில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதற்கு, சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. 2011 நவம்பரில், அரசு இதற்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஐகோர்ட்டில், "டிராபிக்' ராமசாமி, இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், ""பாஷ்யம் சாலையின் நுழைவில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட்டால், பாஷ்யம் தெருவில், சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாது. பூங்காவை சுற்றி, வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்,'' என, தெரிவித்திருந்தார். மாநகராட்சி தாக்கல் செய்த பதில் மனுவில், "பாஷ்யம் சாலையில், தற்போது வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தான், வாகன நிறுத்தம் கட்டப்படுகிறது. பொது மக்கள் நலனுக்காக தான், கட்டப்படுகிறது. வர்த்தகர்களுக்காக அல்ல' என, கூறப்பட்டது.
மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
தாக்கலான ஆவணங்கள் அடிப்படையில், பனகல் பூங்காவை ஆக்கிரமிக்கும் நோக்கம், மாநகராட்சிக்கு இல்லை என்பதும், பொது மக்கள் எப்போதும் போல் பயன்படுத்தலாம் என்பதும் தெரிகிறது. பூங்காவின் எந்த பகுதியையும், வாகன நிறுத்தம் கட்டுவதற்கு பயன்படுத்தவில்லை. எனவே, பாஷ்யம் சாலையில், வாகன நிறுத்தம் கட்டும் முடிவில், குறுக்கிட விரும்பவில்லை. மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை, பதிவு செய்கிறோம். மேற்கொண்டு எந்த உத்தரவும் தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.