சென்னை: தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர், சட்டம் சார்ந்த பணிகளை ஆற்ற, தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த, அன்வர் உசேன் என்பவர் தாக்கல் செய்த மனு: வக்ப் வாரியத் தலைவராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்பது உறுப்பினர்கள், நியமனம் மூலமும், நான்கு உறுப்பினர்கள், தேர்தல் மூலமும், நியமிக்கப்பட்டுள்ளனர். வாரியத் தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேன், பள்ளி கல்வி வரை, படித்துள்ளதாக தெரிகிறது. அரசியல் கட்சியில் செயல்பட்டுள்ளார். முஸ்லிம் அமைப்பு எதிலும் இல்லை. சட்டம் சார்ந்த பணிகளையும், வக்ப் வாரியம் செயல்படுத்த வேண்டும். வக்ப் வாரிய சொத்துக்கள் பதிவு, வக்ப் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வது, போன்ற சட்ட அம்சங்களுக்கு, தீர்வு காணப்பட வேண்டும். சட்ட விஷயங்களில், வக்ப் வாரியத் தலைவருக்கு, போதிய அறிவு இருக்க வேண்டும். ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே, சட்டம் சார்பான பணிகளை ஆற்றவும், உத்தரவு பிறப்பிக்கவும், வக்ப் வாரியத் தலைவருக்கு தடை விதிக்க வேண்டும். வக்ப் வாரியத் தலைவர் நியமனம் தொடர்பான, சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்டவர்களுக்கு "நோட்டீஸ்' அனுப்ப, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.