மதுரை: "பி.ஆர்.பி.,நிறுவனம் கனிம ஏஜன்டாக செயல்பட்டு, கிரானைட்களை வெளியில் வாங்கி,மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்துள்ளது. அரசின் முன் அனுமதி பெறவில்லை,' என அரசுத்தரப்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மேலூர் பி.ஆர்.பி., எக்ஸ்போர்ட்ஸ் பங்குதாரர் சுரேஷ்குமார், "மேலூர் தெற்குத் தெரு நிர்வாக அலுவலகத்திற்கு, கலெக்டர் சீல் வைத்ததை அகற்ற உத்தரவிட வேண்டும்,' என ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
தனிநீதிபதி ,"சீல் வைத்தது, சட்டப்படி நடைபெறவில்லை. நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மனுதாரர் குவாரி தொழிலை தொடரலாம்,' என்றார். கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, "தனிநீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,' என மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்: பி.ஆர்.பி.,நிறுவனம் கனிம ஏஜன்டாக செயல்பட்டு, கிரானைட்களை வெளியில் வாங்கி, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஏஜன்டாக செயல்பட, அரசின் முன் அனுமதி பெறவில்லை. மூன்றாம் நபரிடம் கொள்முதல் செய்து, ஏற்றுமதி செய்தது தவறு. ஏஜன்டாக செயல்பட முடியாது. கனிம திட்டத்தை புதுப்பிக்கவில்லை.
பி.ஆர்.பி.,வக்கீல் ராமகிருஷ்ணரெட்டி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நோட்டீஸ் வழங்காமல், ஆய்வு செய்ய முடியாது.
நவநீதகிருஷ்ணன்: தேச மற்றும் அரசு சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் ஆய்வு செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் 2012 மார்ச் 26 ல்உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது. பி.ஆர்.பி.,கிரானைட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் குவாரி விதிமீறல் குறித்த ஆவணங்களை நீதிபதிகளிடம் நவநீதகிருஷ்ணன் சமர்ப்பித்தார். விசாரணையை, நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.