திருப்பூர் : நண்பனை கொலை செய்த விசைத்தறி தொழிலாளிக்கு, திருப்பூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், கரடிவாவி புதூர், அரிஜன காலனியை சேர்ந்த கந்தசாமி மகன் மயில்சாமி, 26. இவரது நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் முருகேசன், 26 மற்றும் மானாசிபாளையத்தை சேர்ந்த மந்திரி மகன் தங்கமணி, 23, ஆகியோர் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வந்தனர். கடந்த 2009, மார்ச் முதல் தேதி, அம்மூவரும், காரணம்பேட்டை அருகே மது அருந்தியுள்ளனர். போதையில் மூவரிடையே தகராறு ஏற்பட்டது. மயில்சாமியை தங்கமணி மற்றும் முருகேசன் தாறுமாறாகத் தாக்கியதில் உயிரிழந்தார். சடலத்தை போட்டு விட்டு இருவரும் தப்பினர்.
காமநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், இத்தகவல் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த தங்கமணி, கடந்த 2011 அக்., 4ம் தேதி, குடும்ப பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயில்சாமி கொலை வழக்கு, திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில், நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வெங்கடாசலபதி ஆஜரானார். இவ்வழக்கில், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.