திருப்பூர்:விலைவாசி
உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய
தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மறியல் போராட்டத்தில், திருப்பூர்
மாவட்டம் முழுவதும் 1,570 பேர் கைதாகினர்.தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும்
வகையில், மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்
சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த
வேண்டும்; வேலை பாதுகாப்பு, தொழில் முனைவோருக்கு சலுகைகள், அடிப்படை
தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண் டும்,' என்பன உள்ளிட்ட 10 அம்ச
கோரிக்கை களை முன் வைத்து மறியல் போராட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., -
சி.ஐ.டி.யு.,- எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - பி.எம்.எஸ்., மற்றும்
எச்.எம்.எஸ்., தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
திருப்பூர் பழைய பஸ்
ஸ்டாண்ட் முன் நடந்த போராட்டத்தில், சுப்பராயன், ராமகிருஷ்ணன், சந்தானம்,
உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை
வகித்தனர்.ல்லடத்தில் அண்ணாத்துரை சிலை முன்பிருந்து, தொழிற்சங்கத்தினர்
ஊர்வலமாக புறப்பட்டு, தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்த
திட்டமிட்டிருந்தனர். ஊர்வலமாக புறப்பட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள்
சத்தியமூர்த்தி, செந்தில், மணி, ஆனந்தராஜ், காஜா உள்ளிட்ட 78 பேரை
போலீசார் கைது செய்தனர்.அவிநாசி அஞ்சல் நிலையம் முன் நடந்த
போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் முத்துசாமி தலைமை
வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொருளாளர் செல்வராஜ் முன்னிலை
வகித்தார். மறியல் செய்ய முயன்ற 30 பெண்கள் உட்பட 115 பேரை போலீசார் கைது
செய்தனர். மாவட்டம் முழுவதும் 650 பெண்கள் உட்பட 1,570 பேர், பல்வேறு
பகுதிகளில் மறியல் செய்து கைதாகினர். அவர்கள் அனைவரும் மாலையில்
விடுவிக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.