திருநெல்வேலி: நெல்லை அருகே செயல்பட்ட மணல் குவாரி, ஐகோர்ட் உத்தரவால், மூடப்பட்டது. நெல்லை, வாசுதேவ நல்லூரை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவரது நிலத்தையொட்டி செல்லும் நிட்சேபநதியில், பொதுப்பணித் துறையினர் மணல் குவாரி அமைத்துள்ளனர். டிச., 3ம் தேதி முதல் நடந்துவரும் மணல் குவாரியால், 10 அடி ஆழத்திற்கும் மேலாக, மணல் தோண்டப்பட்டு உள்ளது. எனவே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீரின் போக்கின் திசை மாறி விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும், நெல்லை மாவட்டத்தில் மணல் குவாரிகள் அமைக்கக் கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவையும் சுட்டிக்காட்டி, மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மதுரை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் மணல் குவாரிக்கு, இடைக்காலத் தடை விதித்துள்ளதோடு, கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கோர்ட் உத்தரவையடுத்து, நேற்று மணல் குவாரி மூடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.