தூத்துக்குடி: தூத்துக்குடியில், காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக, சரக்கு படகு தரை தட்டி நின்றது. வெளிநாட்டிலிருந்து வரும் பெரிய சரக்கு கப்பல்கள், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்குள் வர வசதியில்லை. அவை, வெளி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதிலிருந்து இறக்கப்படும் சரக்குகள், "பார்ஜ்' எனப்படும் இரும்பால் ஆன, பெரிய படகில் ஏற்றப்பட்டு, இழுவைக் கப்பல் மூலம், கயிறு கட்டி துறைமுக தளத்திற்கு இழுத்து வரப்படும்.
அதுபோல, பார்ஜ் மூலம் சரக்குகள், நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பெரிய கப்பல்களில் ஏற்றப்படும்.
தரை தட்டியது இந்த பார்ஜ், நேற்று மதியம், புதிய துறைமுகத்திலிருந்து, இழுவைக் கப்பல் மூலம், பழைய துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது. அப்போது கடலில் காற்றின் வேகம், அலையின் சீற்றம் காரணமாக திசைமாறி, மணல் திட்டில் ஒதுங்கி, தரை தட்டி நின்றது. பின், இரண்டு இழுவைக் கப்பல்களின் உதவியுடன், பார்ஜ், மாலையில், பழைய துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.