சேலம்: பாரத் பெட்ரோலியம் காஸ், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், காஸ் டேங்கர் லாரிகளுக்கு, நிர்ணயித்த கட்டணத்தை வழங்க மறுத்தால், நாளை (20ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தென்னக காஸ் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கால், ஐந்து மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு, தென்னக காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. எண்ணெய் நிறுவனங்களில் இருந்து காஸ் பாட்டலிங் பிளாண்ட்டுக்கு, 4,000 லாரிகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாட்டலிங் பிளாண்ட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலமாக காஸ் கொண்டு செல்லப்படுகிறது.பாரத் பெட்ரோலியம் காஸ், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், காஸ் டேங்கர் லாரிகளுக்கு, நிர்ணயித்த கட்டணத்தை விட, குறைவாக வழங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு, தென்னக காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது. செயலர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பாரத் பெட்ரோலியம் காஸ், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களில் இருந்து, காஸ் நிரப்பும் டேங்கர் லாரிகளுக்கு, நிர்ணயம் செய்த வாடகையை வழங்க மறுத்து வருகின்றன. நிர்ணயம் செய்த வாடகையை வழங்க வலியுறுத்தி, டில்லியில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் லாரி உரிமையாளர்கள் இன்று பேச்சு நடத்துகின்றனர். இதில், சுமூக முடிவு ஏற்படாவிட்டால், நாளை (20ம் தேதி) முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, என்று தென்னக காஸ் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், ஐந்து மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.