பாகனேரி : பாகனேரியில், கருகவிடாமல் நெற்பயிர்களை காப்பாற்ற டீசல் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.பாகனேரி, காடனேரி, நகரம்பட்டியை சுற்றி ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இவற்றை, அறுவடை செய்வதற்கு முன், பகுதி விளைந்துள்ள நிலையில், போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் விளைந்த நெற்பயிர்களை காப்பாற்ற வயலில் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் சுற்றியுள்ள கிணறுகளில் இருந்து, டீசல் மோட்டார்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300 வாடகை கொடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். பாகனேரி விவசாயி அய்யப்பன் கூறுகையில்,"" கண்மாய்களில் தண்ணீரின்றி, நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இவற்றை காப்பாற்ற கிணறுகளில் இருந்து "பைப்'கள் மூலம் தண்ணீர் எடுத்து பாய்ச்சவேண்டியுள்ளது. விவசாய நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.