காளையார்கோவில்: காளையார்கோவில் ஆத்தா ஊரணி அருகே "வாக்கர்ஸ் பார்க்' ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இங்குள்ள மருதுபாண்டியர் நினைவிடம் அருகே பழமை வாய்ந்த ஆத்தா ஊரணி உள்ளது. 2009ல் சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தில் 13 லட்ச ரூபாய் செலவில்,ஊரணி துர்வாருதல், படித்துறை கட்டுதல் பணி நடந்தது.தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கருவேல் மரங்கள், செடிகள் வளர்ந்துள்ளது.பொது மக்களும் கழிவு பொருட்களை கொட்டி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதியில்லாததால் அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.மாநிலத்திலேயே அதிக வருமானம் வரக்கூடிய ஊராட்சிகளில் இதுவும் ஒன்று. சுற்றுலா பயணிகள்,சிறுவர்கள்,முதியோர் பயன் பெறும் வகையில் ஊரணி அருகே "வாக்கர்ஸ் பார்க்' உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. வக்கீல் ரெங்கசாமி கூறுகையில்,"" சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிதியில் ஆத்தா ஊரணி சீரமைக்கும் பணி நடந்தது. நிதி பற்றாக்குறையால் பணி முழுமை பெறவில்லை, ஊராட்சி நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கி நடை பயிற்சி பெறவும்,வெளியிடங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் பயன் பெறும் வகையில் பூங்கா ஏற்படுத்தவேண்டும்,என்றார்.ஊராட்சிதலைவர் அருள்ராஜ் கூறுகையில்,"" ஊராட்சி சார்பில் விரைவில் ஆத்தா ஊரணி மேம்படுத்தப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.