உடன்குடி:உடன்குடி
அருகே ஜே.ஜே நகரில் 15வயது மகளை குடிபோதையில் தந்தையே கழுத்தை நெரித்து
கொலை செய்த கொடூரசம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்துபோலீஸ்தரப்பில்
கூறப்படுவதாவது; உடன்குடி அருகே ஜே.ஜே நகரில் வசித்து வருபவர் சுந்தர்சிங்
என்ற அலெக்ஸ்(40). அதிமுக பிரமுகரான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும்,
மூன்று பெண்குழந்தைகளும்,முத்துக்குமார் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இதில் மூத்த மகள் பபிதா(15) குலசேகரன்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். பபிதாவின் வீட்டின் அருகே அவரது
பெரியம்மா மகள் அகிலா மற்றும் அவரது கணவர் குமார் ஆகியோர் வசித்து
வந்துள்ளனர். குமார் லாரி டிரைவராக உள்ளார்.
இரவு கடந்த சில நாட்களுக்கு
முன்பு வீட்டில் தனியாக இருந்த பபிதாவிடம் தவறாக நடக்க முயன்றதாக
கூறப்படுகிறது. இதை தனது தாயிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதை அவர் கணவர்
அலெக்ஸிடம் கூறியுள்ளார். ஆனால் இதுபற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல்
அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது மகளை வீட்டில்
இருக்கவைத்துவிட்டு தாய் சுந்தரி வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில்
அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அலெக்ஸ் வீட்டில் தனியாக
இருந்த பபிதாவின் கழுத்தை நெரித்துள்ளார்.பபிதாவின் அலறல் சத்தம் கேட்டு
வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பபிதாவின் தம்பி முத்துக்குமார்
வந்துபார்த்துள்ளான். தந்தையே தனது அக்காவின் கழுத்தை நெறிப்பதை கண்டு
பயந்துபோய் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளான். அக்கம்
பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் பபிதா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்துவந்து பபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து
தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பெற்றெடுத்த தந்தையே தன் மகளை கழுத்தை
நெரித்து கொலை செய்த சம்பவம் உடன்குடி பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.