தேவாரம் : தேனி மாவட்டம், தேவாரம் காய்கறி மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில், கேரளா போலீசார் கலந்து கொண்டு, சபரிமலை மண்டல பூஜைக்காக காய்கறிகளை மொத்த கொள்முதல் செய்தனர். சபரிமலை மண்டல பூஜைக்காக, பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய,தேவசம்போர்டு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. 2000 போலீசார், சந்நிதானம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, தேவையான உணவு பொருட்கள் சுகாதாரமாகவும், தரமாகவும் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க தேவையான காய்கறிகளை மொத்தமாகவும், விலை குறைவாகவும் வாங்க, தேவாரம் காய்கறி மார்க்கெட்டில் நடைபெறும் ஏலத்தில் கேரள போலீசார் கலந்து கொள்கின்றனர்.உணவு பொருட்கள் கொள்முதல் குழுவில் உள்ள எஸ்.ஐ., மார்ட்டின் கூறியதாவது: மளிகை சாமான்களை கேரளாவில் வாங்குகிறோம். தரமான காய்கறிகள் விலை குறைவாக வாங்க, தேவாரம் மார்க்கெட்டில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்றோம். தேவையான காய்கறிகள் மொத்தமாக கிடைப்பதாலும், போக்குவரத்திற்கு எளிமையாக இருப்பதாலும், இங்கு வருகிறோம், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.