ஜெருசலம்: இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலத்தை இரண்டாக பிரிக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் கூறினார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் காசா மற்றும் மேற்குகரை பகுதிகளை உள்ளடக்கி பாலஸ்தீனத்திற்கு ஐ.நா.அங்கீகாரம் வழங்கியது. எனினும் தலைநகர் ஜெருசலம் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ, இஸ்ரேலின் தலைநகராகத்தான் இருக்க வேண்டும் எனவும் கிழக்கு ஜெருசலத்தில் 1500 குடியிருப்புகளை கட்ட ஒப்புதல் வழங்கினார். இதற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஜெருசலத்தை கிழக்கு ஜெருசலம் பகுதியில் குடியிருப்புகளை கட்டக்கூடாது என வலியுறுத்தினர்.இது குறித்து பிரதமர் நெட்டன்யாகூ கூறுகையில் ஜெருசலத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை. இஸ்ரேலின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜெருசலம் இருக்கும். கிழக்கு ஜெருசலத்தில் திட்டமிட்டபடி 1500 குடியிருப்புகளை இஸ்ரேல் அரசு கட்டும் .இவ்வாறு அவர் கூறினார். பிரதமரின் இந்த பிடிவாதத்தை சர்வதேச சமூகம் விமர்சித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.