தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பி.டி., பருத்தி சாகுபடி செய்வது குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் மேகநாதன் வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், தற்போது, 37 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் கால பருத்தி சாகுபடியில், 100 சதவீதம் பி.டி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வீரிய ஒட்டு ரக பருத்தியே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை சாகுபடி செய்யும் போது, அதற்கான தொழில் நுட்பங்களை கடை பிடித்தால் மட்டுமே பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படாமல் பாதுகாத்து உயர் விளைச்சல் பெற முடியும். பருத்தியில் காய்ப்புழு தாக்குதல் மூலம் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க, அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்துகளை உபயோகிப்பதை குறைக்கும் பொருட்டு, பி.டி., பருத்தி உருவாக்கப்பட்டது.
பி.டி., பருத்தி என்பது "பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்' என்னும் பாக்டீரியாவில் இருந்து பருத்தி காய்ப்புழு வகை பூச்சிகள் (லெபிடாப்டிரன்) உணவு பாதையை சிதைக்கும் மரபணுக்களான கிரை 1ஏசி மற்றும் கிரை இரண்டு ஆகியவற்றை பருத்தியில் புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்த மரபணு புகுத்தப்பட்டதன் விளைவாக பருத்தியை தாக்கி உண்ணும் காய்ப்புழுக்களின் உணவு பாதையின் செல்கள் தகர்க்கப்பட்டு, அப்புழுக்கள் இறந்து விடுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரகங்களை சாகுபடி செய்யும் போது, காய்ப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான பூச்சி மருந்து செலவு குறைந்து விவசாயிகளுக்கு லபாம் அதிகம் கிடைக்கிறது.
மாவட்டத்தில், தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயல்கள் மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்ட வட்டாரங்களில், எம்.ஆர்.சி., 6918 பி.ஜி.,1 மற்றும் எம்.ஆர்.சி.7918 பி.ஜி., இரண்டு ஆகிய வீரிய ஒட்டு பி.டி., பருத்தி ரகங்களும், மற்ற வட்டாரங்களில் பன்னி பி.ஜி., இரண்டு பி.டி., எம்.ஆர்.சி., 7351 பி.ஜி., இரண்டு பி.டி., விஸ்வநாத் பி.டி., மற்றும் துளசி பி.ஜி., இரண்டு பி.டி., ஆகிய வீரிய ஒட்டு பி.டி., பருத்தி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பி.டி., பருத்தியை மானாவாரியாக பயிர் செய்யாமல் நல்ல நீர் பாசன வசதியுள்ள இடங்களில் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். ஆனால், தற்போது, 80 சதவீதம் பருத்தி மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ளது. இந்த ரக பருத்தியை சாகுபடி செய்யும் போது, முக்கியமாக ரெப்யூஜ் எனப்படும் பி.டி., புகுத்தப்படாத பருத்தி ரகங்களை அடைக்கலப்பயிராக வயல்களை சுற்றி மூன்று அல்லது நான்கு வரிசைகளில், 20 சதவீதம் அளவுக்கு சாகுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு சாகுபடி செய்வதால், பருத்தியில் தோன்றும் காய்ப்புழுக்கள், பி.டி., பருத்தியை தாக்காமல் அடைக்கல வரிசையில் உள்ள பயிர்களை தாக்கும். அடைக்கல வரிசை பயிர் விதைகளை வயலை சுற்றி விதைக்காததால், தற்போது, அடைக்கலப்பயிராக துவரை விதை பி.டி.,பருத்தி விதை வாங்கும் பாது உடன் வழங்கப்படுகிறது.
அடைக்கல வரிசை பயிர்களில் சேதம் அதிகரிக்கும் போது, அவ்வரிசைகளுக்கு மட்டும் மருந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். ரெப்பூஜ் பயிர் வரிசை சாகுபடி செய்யவில்லை என்றால் பருத்தி காய்ப்புழுக்கள் பிடி பருத்தியை தாக்கி இறந்தாலும் நாளடைவில் அவைகளுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகிவிடும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.