சேலம்: சேலம் மாவட்டத்தில், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்ததால், விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
ஈரோட்டுக்கு அடுத்ததாக, சேலம் மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம், ஆத்தூர், கெங்கவள்ளி, பெத்தநாயகன்பாளையம், பனமரத்துப்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, வீரப்பாண்டி ஆகிய பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், 5,000 ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, 17 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு மஞ்சள் விற்பனை செய்யப்பட்டதால், 12 ஆயிரத்து, 500 ஹெக்டேரில் மஞ்சள் பயிரிடப்பட்டது. இதில், 1.5 லட்சம் மெட்ரிக் டன், மஞ்சள் அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம், பதப்படுத்தப்பட்ட மஞ்சள், 50 ஆயிரம் டன் கிடைத்தது. தற்போது, விலை படிப்படியாக சரிந்து, மார்க்கெட்டில், 4,000 முதல் 6,000 ரூபாயாக உள்ளது.
நடப்பு ஆண்டு, 8,500 ஹெக்டேரில் மட்டுமே மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. இதனால், 90 ஆயிரம் டன் மஞ்சள் மகசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விலை உயர வாய்ப்பு உள்ளது, என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து வேளாண்மை அதிகாரி கூறியதாவது:
கடந்த ஆண்டு அதிகமான சாகுபடியால், மஞ்சள் விலை விழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டு, 4,000 ஹெக்டேர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. மேலும், மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற மாற்று பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்யத் துவங்கி உள்ளனர். மற்ற மாவட்டங்களில் விளைச்சலை பொறுத்து, மஞ்சள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.