சேலம்: சேலம் அஸ்தம்பட்டி அருகே, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டத்துக்கான, வணிகவரித்துறை இணை இயக்குனர் அலுவலகம், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதேபோன்று, இணை இயக்குனர்(என்போர்ஸ்மென்ட்), துணை கமிஷனர், துணை கமிஷனர்(என்போர்ஸ்மென்ட்), துணை கமிஷனர்(அப்பீல்), வணிகவரி டி.ஆர்.ஓ., அலுவலகம் மற்றும் மாநகரப் பகுதிகளில், 12 இடங்களில், உதவி கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது.
மொத்தம் உள்ள, 17 வணிகவரி கட்டிடங்களும், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை கருத்தில் கொண்டு, கடந்த, தி.மு.க., ஆட்சியில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. சேலம் சாரதா கல்லூரி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் பின்புறம், 67 ஆயிரம் சதுர அடி நிலம், ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. 2011 மே, 16ம் தேதி, புதிய கட்டிடத்துக்கான பணிகள் துவங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்த கட்டிடப்பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
புதிய கட்டிடம் நான்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 25 அலுவலகம் அமைப்பதற்கான அறைகள் உள்ளன. மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வணிகவரி அலுவலகமும், இனி ஒரே இடத்தில் இயங்கும். ஒருங்கிணைந்த அலுவலகத்தை திறப்பதற்கான முயற்சிகளில் வணிகவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில், புதிய வணிகவரி அலுவலக கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.