தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நடந்த கவுன்சலிங்கில், புதிதாக பணியமர்த்தப்பட்ட, 581 ஆசிரியர்கள், அவரவருக்கு பணி ஒதுக்கப்பட்ட பள்ளிகளில், பணியில் சேர்ந்தனர்.
தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, சமீபத்தில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணியிடம் குறித்த கவுன்சலிங், ஆன்லைன் மூலம் கடந்த வாரம் நடந்தது. இதில், தங்களுக்கு உரிய பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, பணி உத்தரவை கடந்த, 13ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, பணி ஆணை பெற்ற தஞ்சை மாவட்டத்திலுள்ள, 246 பட்டதாரி ஆசிரியர்கள், 335 இடைநிலை ஆசிரியர்கள், அவரவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர்ந்து, பணியை துவக்கியுள்ளனர் என, தஞ்சை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.