E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு "பீடா' வெற்றிலை விலை திடீர் உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2012
03:22

லாலாப்பேட்டை: பனிப்பொழிவு காரணமாக கிருஷ்ணராயபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள "பீடா' தயாரிக்க பயன்படும் வெள்ளைக்கொடி வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்குட்பட்ட லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், மகிளிப்பட்டி, வல்லம், பிள்ளப்பாளையம், கருப்பத்தூர் ஆகிய பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கற்பூரம், வெள்ளைகொடி ஆகிய இரண்டு ரக வெற்றிலை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, வெற்றிலை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளைக்கொடி வெற்றிலை விளைச்சல் மோசமாக உள்ளது.
இந்த ரக வெற்றிலை தான் அதிகளவு பீடா ஸ்டால்களில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைக்கொடி வெற்றிலை விலை தற்போது உயர்ந்துள்ளது.
100 கவுளி கொண்ட ஒரு மூட்டை, 2,100 ரூபாய் முதல், 2,700 ரூபாய் வரையிலும், கற்பூர ரகம், 3,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம், 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை, விலை இருந்த வெள்ளைக்கொடி, திடீரென, 3,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.