கரூர்: சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, போலீஸ்காரரை தாக்கி, தப்பியோட முயன்ற வழக்கில், சிறை கைதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த காந்தி மகன் கோகுலகிருஷ்ணன், 23. டிரைவர். இவர் திருட்டு வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக கடந்த ஜூன், 25ம் தேதி திருச்சி மத்திய சிறையிலிருந்து, கரூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
முகமது அபுபக்கர் சித்திக் என்ற "எஸ்கார்டு' போலீஸ்காரர், கைதி கோகுலகிருஷ்ணனை அழைத்து வந்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும் திருச்சி செல்லும்போது, சிறுநீர் வருவதாக கூறிய கைதி, தப்பியோட முயன்றார்.
அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரரை கைதி தாக்கினார். அக்கம் பக்கத்திலிருந்த பெ õதுமக்கள் சுதாரித்து, கைதியை மடக்கி பிடித்து, போலீஸ்காரரிடம் ஒப்படைத்தனர். பசுபதிபாளையம் போலீஸார், கோகுலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. நீதிபதி அல்லி முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, தப்பிக்க முயன்றதுக்கு ஓராண்டும், அரசு ஊழியரை தாக்கியதற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.