புதுடில்லி: ஊழலை ஒழிக்க, சமூகஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்திவரும் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும். அவரது வழியை பின்பற்றி , ஊழலுக்கு எதிராக நிச்சயமாக கடுமையான சட்டம் வரும் எனவும் கூறினார். என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பல கட்ட போராட்டங்களை நடத்தினார். தற்போது இவரது தலைமையிலான இயக்கம் இரண்டாக பிரிந்தது. புதிய இயக்கம் தொடர உள்ளார் ஹசாரே.
இந்நிலையில் டில்லியில் நாட்டின் வளர்ச்சி குறித்த 6- வது வருடாந்திர மாநாடு நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு பேசியதாவது: ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் தான் முடியும். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வரும் வலுவான லோக்பால் மசோதா நிச்சயம் வரும். ஊழலை ஒழி்க்கும் விஷயத்தில் ஹசாரேயின் பாதைதான் சிறந்தது என நினைக்கிறேன். 2020- ல் இந்தியா , பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடாக நிச்சயம் மாறும். அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்காக தொலை நோக்கு பார்வை கொண்ட சில தலைவர்களான விக்ரம் சாராபாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், சி.சுப்ரமணியம் ஆகியோரின் பங்களிப்புகள் இன்றைய காலத்திற்கு அவசியம் தேவை. இவ்வாறு கலாம் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.