கோபிசெட்டிபாளையம்:"மாநிலங்களுக்குள் நிலவி வரும் தண்ணீர் பகிர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நதிகள் மற்றும் அணைகள் தேசிய மயமாக்க வேண்டும்,' என மனித உரிமை கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில மனித உரிமை கழகத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோபி நடந்தது. மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சுரேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசு தற்காலிகமாக தப்பியது என்றாலும், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்தால் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சட்டப்படி தவறாக இருந்தாலும், தர்மத்தின்படி நியாயமான முடிவு என மனித உரிமை கழகம் வரவேற்கிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து நீர் பங்கீடு குறித்த சர்ச்சை வழங்குகள் நீடித்து வருகிறது. இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்த, இந்தியாவில் அனைத்து நதிகள், ஆறுகளை தேசிய மயமாக்கி நீர்வளம் அனைத்து மாநில மக்களும், பயன்பெறும் வகையில் மத்திய அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு கிழக்கு அமைப்பாளர் வீரா, மனித உரிமை கழக அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், ஈரோடு மாநகர் மாவட்ட அமைப்பாளர் மருதவேல், நாமக்கல் சுந்தரம், வக்கீல் பிரிவு பிரபு, தனகோடி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.