புதுக்கோட்டை: மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட, 269 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு வழிவகை செய்துள்ள மத்திய அரசை கண்டித்து, ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் லெட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தர்மராஜ், செயலாளர் சிங்கமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் செங்கோடன், துணைச் செயலாளர் விடுதலைக்குமரன், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தலைவர் சண்முகம், தொ.மு.ச., தலைவர் ரெத்தினம், ஐ.என்.டி.யு.சி., தலைவர் கலைச்செல்வன் உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், 31 பெண்கள் உட்பட, 269 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக கண்டனப் பேரணி நடந்தது. புதுக்கோட்டை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேல ராஜவீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை அடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.