திருச்சி: நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட இளைஞர், திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த குமரகுரு மகன் சுரேஷ், 29. கடந்த, 2001ம் ஆண்டு, ஊரில் நடந்த அடிதடி வழக்கில், சுரேஷ் மீது கபிஸ்தலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், சுரேஷ் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.
அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. வெளிநாட்டில் இருந்ததால், அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதையடுத்து, அவரது பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட விபரங்களை, அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, இலங்கையிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது போலீஸாரால் தேடப்படும் சுரேஷ், விமானத்தில் வந்தது தெரிந்தது. அவரை பிடித்து, ஏர்போர்ட் போலீஸில் ஒப்படைத்தனர். தகவலறிந்த, கபிஸ்தலம் போலீஸார் சுரேஷை இரவோடு, இரவாக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.