தஞ்சாவூர்: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டத்தில், 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் உபயதுல்லா, வக்கீல் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைøமை வகித்தார். இதில் எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருப்பனந்தாள் உட்பட, 15 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
*திருவாரூர் துர்காலயா ரோட்டில் உள்ள மின்வாரியம் அலுவலகம் முன், தி.மு.க., மாவட்ட செயலாளர் கலைவாணன் தலைமையில், முன்னாள் அமைச்சர் மதிவாணன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சங்கர், நகராட்சி துணை தலைவர் செந்தில் உட்பட, ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
* திருவாரூர் யூனியன அலுவலகம் முன்பாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதுபோல் நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உட்பட, 14 இடங்கள் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.