Advertisement
செயல் இழந்த நகராட்சி நிர்வாகம்? தி.மு.க., கவுன்சிலர் மவுன அஞ்சலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2012
04:00

கும்பகோணம்: நகராட்சி செயல் இழந்து விட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கும்பகோணம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தை துணைத்தலைவர் ராஜா நடராஜன் நடத்தினார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் கலைச்செல்வன், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளும், கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும், தி.மு.க., உறுப்பினர் தமிழககன் பேசியதாவது:
பழமையும், பாரம்பரியமும் மிக்க கும்பகோணம் நகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் பஸ்ஸ்டாண்ட் நாளுக்குநாள் சுகாதார சீர்கேட்டினை பரப்பி வருகிறது. இதுதொடர்பாக நாளிதழ்கள் தொடர்ந்து சுட்டிகாட்டி வருகிறது. இந்த நகராட்சி நிர்வாகம் செயல் இழந்து விட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகத்துக்கு அனுதாபம் தெரிவித்து, ஒரு நிமிடம் தி.மு.க., உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு, வெளிநடப்பு செய்ய போகிறோம்.
இவ்வாறு பேசினார்.
இதையடுத்து தி.மு.க., கவுன்சிலர்கள், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு, 19 பேரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின் தொடர்ந்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்துவது, கும்பகோணம் நகரை பசுமை உருவாக்கத்துடன் கூடிய மாசற்ற சுற்றுச்சூழல் நகரமாக ஆக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்களின் பல்வேறு கோரிக்கை நிறைவேற்றும் வகையில் துணைத்தலைவரும், கமிஷனரும் பதில் அளித்து பேசினர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.