திருச்சி: மத்திய அரசை கண்டித்து, ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட, 76 பெண்கள் உட்பட, 629 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட, இந்திய மக்களை பாதிக்கும், மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஏ.ஐ.டி.யூ.சி.,யைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அப்பாத்துரை, தொ.மு.ச.,வைச் சேர்ந்த மாயழகு ஆகியோர் தலைமையில், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்காக, காந்தி மார்க்கெட்டில் இருந்து பேரணியாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால், நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதை போலீஸார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. அதையடுத்து, 50 பெண்கள் உட்பட, 400 பேரை போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, சி.ஐ.டி.யூ., மாவட்டத்தலைவர் ராஜா தலைமையில், 100 பேர் மறியல் செய்தனர். அவர்களை ஏற்றிச்செல்ல வாகனங்கள் இல்லை.
வாகனங்களை வரும்வரை, சி.ஐ.டி.யூ.,வினர் சாலையில் படுத்தும், பஸ்களை மறித்தும் போராட்டம் செய்தனர். அதன்பிறகு வாகனங்களை வரவழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும், திருமண மண்டங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
"பெல்' தொழிற்சங்கம்: திருவெறும்பூர் "பெல்' அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், திருவெறும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் தலைமையில், தொழிலாளர்கள், கணேசா பஸ்ஸ்டாப்பில் இருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு ஊர்வலமாக வந்தனர்.
ரயில்வே ஸ்டேஷன் முன், 26 பெண்கள் உட்பட, 129 பேரை திருவெறும்பூர் போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.