பனமரத்துப்பட்டி: மல்லூரில், ரோட்டில் வைத்திருந்த இரும்பு தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார்.
கரூர் மாவட்டம், வடிவேல்பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன், 27. இவர், கடந்த, 16ம் தேதி இரவு, 11மணிக்கு, கண்ணன், 30, என்பருடன், யமாஹா பைக்கில், சேலத்தில் இருந்து, கரூருக்கு மல்லூர் அருகே வந்துகொண்டிருந்தனர்.
மல்லூர் பைபாஸ் அருகே, வாகனங்கள் நின்று செல்ல வசதியாக, ஸ்டோரேஜ் லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால், ரோட்டில் தற்காலிமாக இருப்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பு மீது பைக் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அறிவழகன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து, மல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.