சேலம்: சேலம் வாழ் நகரத்தார் நோன்பு விழா வழிபாட்டுக் குழு சார்பில், நேற்று பிள்ளையார் நோன்பு விழா நடந்தது.
ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில், சேலம் வாழ் நகரத்தார், பிள்ளையார் நோன்பு விழா நடத்துகின்றனர். 22ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை, 7.40 மணிக்கு சேலம், ராஜகணபதிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பகல், 11 மணிக்கு மண்டப விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. மாலை மங்கள இசை, மகளிர் மன்றம் திருப்புகழ் பாட்டு நிகழ்ச்சி, சிறுவர், சிறுமியருக்கான மனமகிழ் நிகழ்ச்சிகள் நடந்தது.
காரைக்குடி நாராயணன், "நாயகனும் நாமும்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். "வாழ்வியல் சிந்தனை' என்ற தலைப்பில் செந்தில்குமரன் பேசினார். விழாவில், நாட்டுக்கொட்டை நகரத்தார் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு, பிள்ளையாரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, குழு தலைவர் செந்தில் வடிவேல், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.