DISTRICT NEWS | அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்... 9ம் வகுப்பில் "சரக்கு' அடிக்கும் கொடுமை| Dinamalar

தமிழ்நாடு

அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்... 9ம் வகுப்பில் "சரக்கு' அடிக்கும் கொடுமை

Added : டிச 19, 2012 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பனமரத்துப்பட்டி: "வகுப்புக்கு நோட்டு, புத்தகம், எடுத்து வராமல், பாடம் நடத்தும்போது, குலுக்கல் சீட்டு விளையாடுவதும், மொபைல் ஃபோனில் படம் காட்டியும், மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர்' என, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில், ஆசிரியர்கள் குமுறினர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழி கல்வியில், 1,410 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள், மது போதையில் பள்ளிக்கு வந்து, கத்தி, கட்டை, இரும்பு பைப் ஆகியவற்றால், ஒருவரையொருவர் தாக்கி, கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, 17ம் தேதி, "காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, பள்ளியில், பெற்றோர், ஆசிரியர்கள் கழக கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் பேசியதாவது:
பெண் ஆசிரியைகளை, மாணவர்கள் பாட்டு பாடி, கேலி, கிண்டல் செய்கின்றனர். ஒரு வகுப்பில், ஐந்து மாணவர்கள் செய்யும் அடாவடியால், 50 மாணவ, மாணவியரின் படிப்பு கெடுகிறது. பாடம் நடத்தும் சமயத்தில், மாணவர்கள் குரூப்பாக அமர்ந்து கொண்டு குலுக்கல் சீட்டு ஆடுகின்றனர்.
அரசு, இலவசமாக புத்தகம் வழங்கினாலும், மாணவர்கள், ஒரு புக் மட்டும் எடுத்து வருகின்றனர். பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வகுப்பில் இருந்து, சொல்லாமல் மாணவர்கள் எழுந்து செல்கின்றனர்.
பாடம் நடக்கும் சமயத்தில், மொபைல் ஃபோன் மூலம் பாட்டு, படம் பார்க்கின்றனர். ஹான்ஸ், குட்கா பாக்கு போட்டுக்கொண்டு போதையில் மாணவர்கள் உள்ளதால், நாங்கள் எதுவும் பேசமுடிவதில்லை. பல மாணவர்கள், தமிழில் படிக்க, எழுத தெரியாத நிலையில் உள்ளனர். இம்மாணவர்களால், மாணவியர் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். மாணவர்களுக்கு, பெற்றோர்கள் அறிவுரை கூறி ஒழுக்கத்தை கற்றுத் தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளி நேரத்தில், மது அருந்திய மாணவர்கள், அடிதடியில் இறங்கியவர் என, ஒன்பது மாணவர்களுக்கு, டி.சி., கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். பொதுத்தேர்வு காரணமாக, அடிதடியில் இறங்கிய ப்ளஸ் 2 மாணவர்களை, "சஸ்பெண்ட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
22-டிச-201200:40:03 IST Report Abuse
ganapathy சாராய கடைகளை மூடுங்க அம்மா ஜெயா அவர்களே. உங்களுக்கு கோடி புண்ணியம். இந்த கடை தொறந்த பாவம் மு.க வுக்கும் அவர் குடும்பத்துக்கும்
Rate this:
Share this comment
Cancel
Amuthu - Alangudi  ( Posted via: Dinamalar Android App )
20-டிச-201205:38:09 IST Report Abuse
Amuthu ஆசிரியர் தண்ணி அடித்து விட்டு வந்தி்ருந்தால் அதி்காரிகள் பார்வையிட்டு பணியிலிருந்து நீக்கிவிட முடியும். ஆனால் மாணவர்களை எச்சரிக்கத்தான் முடிகிறது. அனைவரும் தேர்ச்சி எனும்போது அரசாங்கம் படிப்பவனுக்கு கொடுக்கும் மரியாதை என்ன? அப்படிச் செய்து அரசாங்கம் சாதி்த்தது என்ன? தமிழகத்தி்ல் அனைவரும் கல்வி அறிவு பெற்றுள்ளனர் என்ற தவறான புள்ளிவிபரங்களை வெளியிட்டு நம்மை ஏமாற்றுகின்றன.ஒரு வகுப்பில் நன்கு படிக்காதவனை தேர்ச்சி செய்தால் அவன் எப்படி கல்வியின் மீதும் சமுதாயத்தி்ன் மீதும் அக்கறை கொள்வான்.
Rate this:
Share this comment
Cancel
srinivasan sulochana - nsw2147,ஆஸ்திரேலியா
20-டிச-201204:40:03 IST Report Abuse
srinivasan sulochana மாணவர்கள் என்பதற்கான விளக்கமே மாறிவிட்டது. ஒரு பயமோ, பணிவோ, அக்கறையோ கருத்தோ எதுவும் இல்லை. மனைவிகளும் ஆசிரியைகளும் பயந்து பயந்தே பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதற்காக பள்ளியில் போலிஸ் போட முடியுமா என்ன. மீறி ஆக்ஷன் எடுத்தால் ஆசிரியை முருகேஸ்வரியின் கதிதான்... இவர்கள்தான் எதிர் கால இந்தியாவின் நம்பிக்கை நக்ஷத்திரங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:04:45 IST Report Abuse
தமிழ்வேல் மிடாஸ், டாஸ்மாக் செய்யும் கேடுகள் இவை..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
19-டிச-201216:18:21 IST Report Abuse
LAX மாணவர்களுக்காக எப்போதும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே.... சொல்வது யாவர்க்கும் எளிதாம்..... இந்த கேவலமான சூழ்நிலையில் இருந்து அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். ஆசிரியைகளைப்பார்த்து பாட்டு பாடி கேலி செய்பவர்களையும், மொபைல் போனில் பாட்டு/படம் கேட்டு/பாடிக் கொண்டிருப்பவர்களையும், போதையில் இருப்பவர்களையும் சுளுக்கெடுத்து அடித்து விரட்டுங்கள். அவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய பள்ளிக்கு வரத்தேவை இல்லையே.... படிக்கத்தெரியாது, ஆனால் படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கஷ்டப்பட்டு பாடம் நடத்துங்களேன்.. ப்ளீஸ்....
Rate this:
Share this comment
indhiyan - bangalore,இந்தியா
19-டிச-201218:28:46 IST Report Abuse
indhiyanஇதாம்பா பார்லிமன்டுலயும் நடக்குது. எல்லாரையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:16:15 IST Report Abuse
தமிழ்வேல் 8000 பேர புதுசா டாஸ்மாக்கு வேலைக்கு செர்க்கிரத்துக்கு பதில்.... இந்த நிலையில சமயத்தில சாராயக் கடைக்கும் பூட்டு போடலாமே ?...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
19-டிச-201215:13:32 IST Report Abuse
தமிழ் குடிமகன் திராவிட கழகங்களின் ஆட்சியில் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும் .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:13:48 IST Report Abuse
தமிழ்வேல் உங்க டாபிக் ஆச்சே ? பெயர் நன்றாக உள்ளது......
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
19-டிச-201215:02:52 IST Report Abuse
ganapathy படித்து பரிட்சையில் பாஸ் அனா அடுத்த கிளாஸ் போகலாம் என்ற நிலைமை மாற்றினது சரியல்ல. ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் சரி, அப்பறம் ஒழுங்க படிச்ச பள்ளிக்கூடம் வா இல்லை என்றால் மாடு மேய்க்க போய்டு என்றால் சரியா வரும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:12:43 IST Report Abuse
தமிழ்வேல் அடுத்த கிளாஸ் போகலேன்னா கிளாஸ் கழுவத்தான் போகணும்......
Rate this:
Share this comment
Cancel
saravanan - pollachi  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201214:45:22 IST Report Abuse
saravanan எங்கே போகிறது நாடு
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:11:13 IST Report Abuse
தமிழ்வேல் இந்த வருமானத்தில்தான் இப்போ தமிழக பட்ஜெட்டே நடக்குது...வரிப்பணம் எல்லாம் இலவசத்துக்கு போய்டுது......
Rate this:
Share this comment
Cancel
mp - tamil nadu  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201210:33:50 IST Report Abuse
mp ivanungala siruvar seerthirutha palliyil podanum..
Rate this:
Share this comment
Cancel
Amuthu - Alangudi  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201206:15:06 IST Report Abuse
Amuthu இச்செயலைக் கண்டித்து ஆசிரியர் தண்டனை கொடுத்தி்ரந்தால் என்ன நடந்தி்ருக்கும் உங்களுக்கு செய்தி் வேறு மாதி்ரி கிடைத்தி்ருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை