நரசிங்கபுரம்: "காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, நரசிங்கபுரம் அருகே, விநாயகபுரம் பகுதியில் உள்ள தரை பாலத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், நீரோடையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப்பாலத்தின், இரு புறமும் உள்ள கான்கிரீட் தடுப்பு சுவர் சிதிலமடைந்து காணப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், தரை பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தற்போது, இரு புறமும் தடுப்பு சுவர் இல்லாததால், பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், மரண பீதியில் சென்றனர். "ஆட்கொல்லி' பாலமாக மாறிய, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து, "காலைக்கதிர்' நாளிதழில் அக்டோபர், 10ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, "நாகாய்' திட்ட இயக்குனர் பொன்னையா தலைமையிலான, தேசிய நெடுஞ்சாலை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
தற்போது, தரைப்பாலத்தின் இரண்டு புறமும் இரும்பு தடுகளுடன் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.