புதுடில்லி: டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பார்லிமென்ட்டின் இரு அவைகளில் சீரியசான விவாதம் நடந்து கொண்டிருக்க, ராஜ்யசபையில் காங்.எம்.பி. ஒருவர் சிரித்த முகத்துடன் பதில் அளித்து பேசியதால் , சக எம்.பி.க்கள் கடும்அதிருப்தி அடைந்தனர். நேற்று பாராளுமன்றம் கூடியதும், டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் தான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது ராஜ்யசபையில் பா.ஜ. வைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி. மாயா சிங், எழுந்து கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக அரசின் நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய காங். கட்சி எம்.பி.யும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சருமான ராஜிவ் சுக்லா ,சிரி்த்த முகத்துடன் எழுந்து பதில் அளித்தார். அவையில் அனைவரும் படு சீரியசாக விவாதித்துக்கொண்டிருந்த நிலையில் சுக்லாவின் முகம் சிரித்த முகத்துடன் இருந்துள்ளதை சபை கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனால் சக எம்.பி.க்கள் சுக்லாவின் நடத்தையை கண்டு அதிருப்தி அடைந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.