கல்யாண்: கணவனின் சகோதரருடனான கள்ளக்காதல் அம்பலமானதால் கூலி்ப்படையுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 11 துண்டுகளாக வெட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.மும்பையின் டிட்வாலா பகுதியில் உள்ள கோயில் அருகே கடந்த டிசம்பர் 12-ம் தேதி அனாதையாக ஒரு சாக்குப்பை கிடந்தது. போலீசார் சோதனை நடத்திய போது ஆண் சடலம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இது தொடர்பாக அப்பகுதி போலீஸ் ஸ்டேசனில் ஏற்கனவே ஆண் ஒருவர் ஒரு காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆண் சடலத்தை அடையாளம் காட்டியதில் கொலையானவர் மெகதார் (31) எனவும், பால் வியாபாரி எனவும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மெகதார், அவரது இரண்டாவது மனைவி ஆதித்யா (29) ஆகியோர் டிட்வாலாவில் வசித்து வந்தனர். ஆதித்யாவிற்கும் மெகதாரின் மூத்த சகோதரர் பர்வேஷூக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் மெகதாருக்கு தெரியவரவே. ஆதித்யா, கள்ளக்காதலன் பர்வேஷ் மற்றும் கூலிப்படையினர் மெகதாரை திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்தது.இந்த கொலை தொடர்பாக ஆதித்யாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். டிட்வாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர நாயக் கூறுகையில், மெகதாரை கயிறால் கழுத்தை இறுக்கியும், தலையனையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை 11 துண்டுகளாக வெட்டி சாக்குப்பையில் கோயில் அருகே வீசியுள்ளனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கற்பழிப்பு, கள்ளக்காதல் மற்றும் இதர பாலியல் வன்முறைகளுக்கு ஒரே தீர்வு மேல்முறையீடு இல்லாத மரண தண்டனைதான்.. அதுவும் சவுதி அரேபியாவில் உள்ளது போன்று பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்.. ஜனநாயகம் என்ற போலிக்கூரையின் கீழே எவ்வளவு அட்டூழியங்கள் நடக்கின்றன... தண்டனைகள் கொடூரமாக்கப்பட்டால் ஒழிய இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.