E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பார்லிமென்ட்டில் கொந்தளித்த பெண் எம்.பி.க்கள் - மாணவியை நேரில் சந்தித்து சோனியா ஆறுதல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 டிச
2012
07:45
பதிவு செய்த நாள்
டிச 19,2012 04:46

டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியை , மருத்துவமனைக்கு நேரில் சென்று காங். தலைவர் சோனியா சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறினார்.
நாட்டின் தலைநகருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது அந்த சம்பவம். டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, 23 வயது மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது. இதில் இரு அவைகளில் பெண் எம்.பி.க்கள் கொந்தளித்து போயினர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசினர். நேற்று காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. ‌எனினும் முக்கிய பிரச்னையாக டில்லி கற்பழிப்பு சம்பவம் குறி்த்து எம்.பி.க்கள் பேசினர்.

பார்லி.யில் கொந்தளித்த எம்.பி.க்கள்
பார்லிமென்ட் லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.சமாஜ்வாதி கட்சி எம்.பி. ‌ஜெயாபச்சன் பேசுகையில், குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்என்றார். பின்னர் பகுஜன்சமாஜ் கட்சி த்லைவர் மாயாவதி பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் கடுமையாக்கவும், தற்போதுள்ள சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்து, குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வகை செய்ய வேண்டும் என்றார். இவரைத்தொடர்ந்து ரேணுகா சவுத்ரி, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் பார்லிமென்ட்டில் கொந்தளித்தனர்.
மாணவியை நேரில் சந்தித்த சோனியா
இந்நிலையில் நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக காங். செய்தி தொடர்பாளர் ஜெனார்த்தன் திவேதி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மாணவியை சோனியா சந்தித்து ஆறுதல் கூறினார். நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது எனவும், குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது. அவர்கள் அனைவரும் கைது செய்து உரிய விசாரணை நடத்த டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிற்கும் கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்யவும், சட்டம் ,ஒழுங்கினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அந்த செய்தியில் திவேதி கூறினார்.இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், எஞ்சிய குற்றவாளிகளை பிடிக்க ‌டில்லி போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saseendran - chennai,இந்தியா
20-டிச-201205:15:00 IST Report Abuse
saseendran ஒரு பெண் பாதிக்கப்பட்டவுடன் , ஓ என்று ஊளை போடும் அரசியல்வாதிகள் , பாராளுமன்றத்தினை முடக்க நினைக்கிறார்களே , இவர்கள் இலங்கையில் அத்தன தமிழ் பெண்களை கற்பழிக்கும்போது ரசித்து பார்துக்கொண்டிருந்தது ஏன் .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
k.gunasekaran - namakkal  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201212:18:27 IST Report Abuse
k.gunasekaran தயவுசெய்து எங்கள் மாநில காவலதி்காரி வெள்ளைதுரையை டெல்லிக்கு மாறுதல் செய்யுங்களேன்
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
Cancel
Thangaraj - Coimbatore,இந்தியா
19-டிச-201211:50:55 IST Report Abuse
Thangaraj மொதல்ல பொது இடங்களில் பெண்கள் கவர்சியாக உடை அணிந்து வருவதை தடை செய்ய வேண்டும், அதற்கு அப்புறம் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கலாம். They are not culprits, our society makes them culprits.
Rate this:
23 members
2 members
42 members
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201211:45:10 IST Report Abuse
S. ரெகுநாதன் டெல்லி மத்திய, மாநில அரசாங்கங்களின் மெத்தன போக்கின் சிகரம் இந்த கொடூர சம்பவம்,..கற்பழிப்பு சம்பவங்கள் மிக அதிகமாக நாட்டின் தலைநகரான டெல்லி மாநகரத்தில் மட்டுமே திரும்பத்திரும்ப நடப்பது மிக பெரிய தலைகுனிவு...கேவலம்...ஷீலா தீட்சித்க்கு தனமானம் இருந்தால் இந்த கேவலமான செயல் தன மாநிலத்தில் நடந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும்.. டெல்லி காவல் துறையும், மத்திய உள்துறையும் ஒருவரை ஒருவர் கையை காண்பித்து தப்பநினைபது கண்டிக்கத்தக்கது...100 போலீஸ் ரோந்து ஜீப்புகள் 600 அதிகரிக்க பட்டும் படித்த பெண்கள் பொது இடங்களில் மானபங்கபடுவது குறைந்த பாடில்லை...மத்திய காங்கிரஸ் அரசின் சிந்தனை சிற்பி சோனியா ஹரியானா பலாத்காரம் நடந்த பொது பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை சென்று பார்த்த மறு தினம் மீண்டும் ஒரு கொடூரம் நடந்தது...அது போல் இப்போது டெல்லியில் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்...மீண்டும் என்ன நடக்குமோ..??? எல்லாவற்றிற்கும் மேலாக மேல்நாட்டு கலாச்சார சீரழிவுகளை காங் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டதால் தற்போது அதன் பலனை அனுபவிக்கிறோம்...பெண்களும் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதமான உடைகளை பயன்படுத்த வேண்டும்...முற்போக்கு என்ற பெயரில் இந்திய கலாச்சாரதுக்கு விரோதமான உடைகளையும், செயல்களையும் (மது) அறவே ஒழிக்கவேண்டும். மேலும் சிறிய அளவு தற்காப்பு கருவிகளை (கத்தி, கூர்மையான ஆயதங்களை) பெண்கள் பயணத்தின் பொது வைத்துகொள்வது நல்லது....இவற்றிற்கும் மேலாக மத்திய அரசு உடனடியாக இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்க வேண்டும்....
Rate this:
2 members
3 members
13 members
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
19-டிச-201211:14:04 IST Report Abuse
தமிழ் குடிமகன் இதையெல்லாம் கவனிக்க ஷீலா அம்மாவிற்கு நேரம் ஏது.................அவர் 600 ரூபாயில் எப்படி குடும்பத்தை நடத்தவது என்று மண்டைய பிச்சுக்கிட்டு இருக்கார் .
Rate this:
14 members
0 members
18 members
Share this comment
Cancel
selvam - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201210:43:09 IST Report Abuse
selvam பெண்களுக்கு பாதுகாப்பு அதி்கபடுத்தனும் அதே சமயம் பெண்களும் நம் நாடு கலாசரத்தை பின்பற்ற வேண்டும்
Rate this:
1 members
1 members
16 members
Share this comment
Cancel
vigneswari - tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201210:12:34 IST Report Abuse
vigneswari டில்லியில் மட்டுமல்ல நாட்டின் பெரும்பாலான பகுதி்களில் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் அதுவும் இது போன்ற மிருகங்களை பெற்றவர்களும் பெண்கள்தான் ஆகவே அவர்ளின் தாய்மார்களாலேயே தண்டனை அளிக்கப்பட வேண்டும்
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
19-டிச-201210:00:26 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஆண்டுக்காண்டு லட்சம் பேராவது பாலியல் வந்முரைக்காலாகின்றனர் (இரு பாலினரும்) ஆனால் தலைநகரில் நடப்பவை மட்டும் மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்படுவது ஏன்? மற்ற அரசியல் செய்திகளை திட்டமிட்டு பின்னுக்குத் தள்ள இந்நிகழ்ச்சி பெரிதாக்கப்படுகிறது சிந்தியுங்கள்
Rate this:
3 members
0 members
9 members
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
19-டிச-201209:46:59 IST Report Abuse
ஆனந்த் தீவிரவாத தாக்குதலின் பொது கண்டனமும்., இது போல நடக்கும்போது ஆறுதலும் கூற இந்த நாட்டின் தலைமைக்கு சொல்லியா தெரியவேண்டும்?
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
NS நாயுடு - சீர் கெட்ட சென்னை,இந்தியா
19-டிச-201209:22:13 IST Report Abuse
NS நாயுடு எனக்கோர் ஆசை: என் தாய் பாரதம் விடுதலை பெறவேண்டும் வெளிநாட்டினரிடமிருந்தும், அவர்களின் மேலாதிக்கத்திலிருந்தும், அந்த மோகத்திலிருந்தும் அவள் இழந்த தன் தர்மங்களை, வாழ்வியல் நெறிகளை மீண்டும் பெறவேண்டும். இந்த புண்ணிய தேசம் மீண்டும் அந்நிய ஆட்சிக்கு முன்பிருந்தது போல உலகின் தலைசிறந்த நாடாக, தர்மத்தின் காவலனாக, பெண்ணை தெய்வமாக மதித்த, ஒரு வழிகாட்டியாக திகழவேண்டும். இது நிகழும், நம்புகிறேன்.
Rate this:
2 members
3 members
11 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.