P. S.. F.., Appointed director Subhash Joshi | பி.எஸ்.எப்., இயக்குனராக சுபாஷ் ஜோஷி நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.எப்., இயக்குனராக சுபாஷ் ஜோஷி நியமனம்

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி;எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைவராக, சுபாஷ் ஜோஷியும்,இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையின் தலைவராக, அஜய்சாத்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் உயரிய பாதுகாப்புபடையான, என்.எஸ்.ஜி.,யின் (கறுப்பு பூனை படை), தலைமை இயக்குனராக இருக்கும், சுபாஷ் ஜோஷி, 1.8 லட்சம் வீரர்களை கொண்ட, எல்லைபாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.,) தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.பி.எஸ்.எப்., தலைமை இயக்குனராக இருந்த, யு.கே.பன்சால், கடந்த 1ம் தேதி, ஓய்வுபெற்றதை அடுத்து, அந்த பணியிடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு, சுபாஷ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.


உத்தர்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர், 1976ம் ஆண்டின், ஐ.பி.எஸ்., அதிகாரி. 2014, பிப்ரவரி வரை, இந்த பணியில் தொடர்வார்.இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையின், புதியதலைவராக அறிவிக்க பட்டுள்ள, அஜய் சாத்தா, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் வரை அந்தபொறுப்பில் தொடர்வார். இவர், இப்போது, உள்நாட்டு பாதுகாப்பு துறையின், சிறப்பு இயக்குனராக உள்ளார்.என்.எஸ்.ஜி.,யின் தலைமைஇயக்குனராக இருந்த, சுபாஷ் ஜோஷி, பி.எஸ்.எப்., படை பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள அந்த பணியிடத்திற்கு, கேரளாவை சேர்ந்த, ஐ.பி.எஸ்.,அதிகாரி, அரவிந்த் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், எல்லை பாதுகாப்புபடையின் சிறப்பு தலைமை இயக்குனராக உள்ளார். கறுப்பு பூனை படையின் தலைமை இயக்குனராக இருப்பார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை