டில்லியில் மாணவி கற்பழிப்பு: 4 பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:தலைநகர் டில்லியில், தன் நண்பருடன், இரவு நேரத்தில், பேருந்தில் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவியை, ஒரு வெறிக் கும்பல், கற்பழித்தது. எதிர்ப்பு தெரிவித்தமாணவியின் நண்பரையும், அந்த கும்பல், இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கியது.இருவரையும், பேருந்திலிருந்து தூக்கி வீசி விட்டு, அந்த கும்பல், தப்பி ஓடியது. நாடுமுழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், பார்லிமென்டையும் நேற்று உலுக்கியது.இந்நிலையில், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பலை, டில்லிபோலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர்.
குற்றவாளி: இதையடுத்து, இந்தசம்பவத்தின் முக்கிய குற்றவாளி உட்பட, நான்கு பேரை, கைது செய்தனர். இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமார் கூறியதாவது:மாணவியை கற்பழிக்க பயன்படுத்திய பேருந்து, பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக அனுமதி பெற்றது. அதை, வர்த்தக நோக்கத்துக்காக, விதிமுறைகளை மீறி, பயன்படுத்தி உள்ளனர். அந்தபேருந்தின் ஓட்டுனர் ராம் சிங் தான், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி.அவனுடைய சகோதரன் முகேஷ், டில்லியில் உடற்பயிற்சி மையம் வைத்து உள்ள, வினய் சர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா உள்ளிட்ட ஏழு பேர், சம்பவத்தன்று இரவு, மது அருந்தி, ஜாலியாக, அந்த பேருந்தில் சென்று உள்ளனர். முகேஷ் தான், பேருந்தை ஓட்டியுள்ளான்.

சில்மிஷம்: முனிக்ரா பேருந்து நிறுத்தத்தில், மருத்துவக் கல்லூரி மாணவியும், அவரதுநண்பரும், பேருந்தை நிறுத்தியுள்ளனர். "இந்த பஸ், துவாரகாவுக்கு போகிறதா' என, அவர்கள் கேட்டுள்ளனர். உடனே, பேருந்தில் இருந்தவர்கள், "ஆம். இந்த பஸ்,துவாரகாவுக்கு தான், போகிறது. சீக்கிரமாக ஏறுங்கள்' என, கூறியுள்ளனர்.பேருந்து சிறிது தூரம் சென்றதும், கல்லூரி மாணவியிடம், ராம் சிங் உள்ளிட்டவர்கள்,சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாணவியின் நண்பர், எதிர்ப்புதெரிவித்ததும், அவரை, இரும்புக் கம்பியால், பலமாக தாக்கியுள்ளனர். மாணவியையும் பலமாக தாக்கி, கும்பலில் இருந்த அனைவரும், அந்த பெண்ணை கற்பழித்து உள்ளனர்.

இதன்பின், மகிபால்பூர் என்ற இடத்தில் உள்ள, மேம்பாலத்தின் அருகே பேருந்து வந்தபோது, மாணவியையும், அவரது நண்பரையும், பேருந்தில்இருந்து, தூக்கிவீசி விட்டு, பேருந்தை வேறு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, தப்பி ஓடி விட்டனர்.கேமரா: அடுத்த நாள் காலையில், போலீசார், அந்த பேருந்தை கண்டுபிடித்தனர். ஆனாலும், அதில், எந்த தடயமும் இல்லை. மாணவியும், அவரது நண்பரும்,பேருந்தில் ஏறியஇடத்தில் பொருத்தப்பட்டிருந்த, ரகசிய கண்காணிப்பு கேமராவில், பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தோம்.மேலும், பலரிடமும் விசாரித்து, குற்றவாளிகள் யார் என்பதைஅடையாளம் கண்டுபிடித்தோம். தீவிரமுயற்சிக்கு பின், முக்கிய குற்றவாளியான ராம்சிங், முகேஷ், சர்மா, குப்தா ஆகியோரை கைது செய்தோம், என்றார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadaitheru - chennai,இந்தியா
19-டிச-201209:35:26 IST Report Abuse
kadaitheru தில்லி மேட்டு குடிகளுக்கு நடந்தால் மட்டுமே கொடுமை என்ற மனப்பான்மையில் இருக்கும்வரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Vaidhyanathan K - Bangalore,இந்தியா
19-டிச-201207:34:31 IST Report Abuse
Vaidhyanathan K "என்னைய நாடு முழுவதும் முழுவதும் அதிர்ச்சி அதிர்ச்சி" என்று நீ தான் சொல்லி கொண்டு இருகிறாய். ஆனால் நம் சொந்தங்கள் இன்றைக்கும் இலங்கையில் கொடுமைக்கு ஆளாகி கொண்டு இருகிறார்கள். இதை எங்கு போய் சொல்வது. எனக்கு எந்த அதிர்ச்சியும் ஆகவில்லை. ஒரு பெண் என்பதால் மனது வேதனை படுகிறது. மற்றபடி சம்பவம் நடந்தது ஹிந்தி பேசும் Delhi இல். அப்படி இருக்கும் பொது இந்த தமிழனுக்கு என்ன கவலை. சும்மா நாடு முழுக்க அதிர்ச்சி அதிர்ச்சி என்று don't force your foolish thinking into us.
Rate this:
Share this comment
Cancel
singaravelu - thiruvarur ,இந்தியா
19-டிச-201205:52:32 IST Report Abuse
singaravelu கடுமையாகப் போராடிக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த டில்லிப் போலீசாரையும் மாநில அரசையும் பாராட்டுவதை விட்டு பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்புவது சிறுபிள்ளைத் தனம் என்பது கூடவா தெரியவில்லை எதிர்க்கட்சிகளுக்கு...? மனிதன் திருந்தாதவரை இதுபோன்றக் குற்றங்கள்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

ஏப்ரல் 30,2017