புதுடில்லி:"டில்லியில், மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு, போலீசாரின் கவனக் குறைவே முக்கிய காரணம்' என, தேசிய மனித உரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், டில்லியில், மருத்துவகல்லூரி மாணவி கற்பழிக்கப் பட்ட சம்பவம் குறித்த விவகாரத்தை, மனித உரிமை கமிஷன் கையில் எடுத்து உள்ளது. டில்லி போலீசாரின் கவனக் குறைவே, இந்த சம்பவத்துக்கு, முக்கிய காரணம் என, கமிஷன் கருதுகிறது.
சட்டம், ஒழுங்கு குறித்த விஷயத்தில், மக்களின் நம்பிக்கையை பெற, டில்லி போலீசார், தவறி விட்டனர். பெண்கள், குழந்தைகள் உட்பட, பொதுமக்கள் அனைவரின், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, போலீசாரின் கடமை. சமீபகாலமாக, டில்லியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து உள்ளன.இது தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், டில்லி போலீசாருக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.