புதுடில்லி:"லோக்சபா உறுப்பினர்கள், தங்களுக்குள்ள வர்த்தக ஈடுபாடு குறித்து, வெளியிட வேண்டும்; இது குறித்து, லோக்சபா பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்' என, பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.லோக்சபா உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்துள்ள தொழில், வர்த்தகம் மற்றும் அதிலுள்ள ஈடுபாடு குறித்து, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என, லோக்சபா ஒழுங்கு, நன்னெறி கமிட்டி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படும் பதிவேட்டில், உறுப்பினர்கள், தங்களுக்கு உள்ள வர்த்தக ஈடுபாடு குறித்து பதிவு செய்ய வேண்டும், என பார்லி ஒழுங்கு கமிட்டி, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த நடைமுறை ஏற்கனவே, ராஜ்யசபாவில் நடைமுறையில் உள்ளது.லோக்சபாவில் நடைபெறும், வர்த்தகம், தொழில் சம்பந்தப்பட்ட விவாதங்களின் போது, அதில் தொடர்புடைய உறுப்பினர்கள் பங்கேற்று, தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதை தவிர்க்கவும், அதனால், பின்பு சர்ச்சை எழுவதை தவிர்க்கவும், இந்த நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.