Advertisement
தண்ணீர் தர தமிழகம் மறுக்கிறது:கேரள முதல்வர் குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,05:39 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 19,2012,06:01 IST

திருவனந்தபுரம்:""பரம்பிக்குளம் - ஆழியாறு நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை, தமிழகம் மீறி வருகிறது; கேரளாவுக்கு தர வேண்டிய தண்ணீரை, தர மறுக்கிறது. இதனால், 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன,'' என, கேரள சட்டசபையில், முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

கேரளாவில் நிலவும் வறட்சி குறித்து, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட, ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, முதல்வர், உம்மன் சாண்டி பேசியதாவது:பரம்பிக்குளம் - ஆழியாறு நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை, தமிழகம் மீறி வருகிறது. ஒப்பந்தப்படி, தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை, தர மறுக்கிறது. இதனால், பாலக்காடு மாவட்டம் மற்றும் சித்தூர் தாலுகாவில், 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த விவகாரம் குறித்து, மாநில அமைச்சரவை, இன்று விவாதிக்க உள்ளது. தேவைப்பட்டால், தமிழக முதல்வரிடமும் நான் பேச தயாராக உள்ளேன். "கேரளாவிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுங்கள்' என, மத்திய நீர் வள துறை அமைச்சர், இரண்டு கடிதங்கள் எழுதியும், அதை தமிழகம் மதிக்கவில்லை.இவ்வாறு, முதல்வர் சாண்டி பேசினார்.இந்த விவாதத்தில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, எதிர்க்கட்சி தலைவர், வி.எஸ்.அச்சுதானந்தன் உட்பட பலர் பேசினர்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
yaarivan - madurai,இந்தியா
20-டிச-201200:52:00 IST Report Abuse
yaarivan என்ன இது உல்டாவா இருக்கு .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.