மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி சடங்கு நிகழ்ச்சி குறி்த்து பேஸ்புக்கில் விமர்சித்த இரு இள்ம பெண்கள் மீதான வழக்கினை போலீசார் வாபஸ் பெற்றனர். கடந்த நவ.18-ம் தேதி பால்தாக்கரே (87) இறந்தார். 19-ம் தேதி நடந்த இறுதி சடங்கினையொட்டி மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து மும்பை பஹல்கார் பகுதியைச்சேர்ந்த இரு இளம் பெண்கள் பேஸ்புக்கில் விமர்சனம் செய்தனர். இதற்கு சிவசேனா கட்சி கொந்தளித்தது. போலீசார் இரு பெண்களையும் நவ.20-ல்கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டம் 505(2) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.கருததுசுதந்திரம் பறிக்கப்பட்டதாக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இரு பெண்கள் மீதான வழக்கினை நேற்று மும்பை போலீசார் வாபஸ் பெற்றனர். இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் தானே மாவட்ட கோர்ட்டில் மனு செய்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.