புதுடில்லி;""நாட்டில், எச்.ஐ.வி., உயிர்க்கொல்லி நோயின் தாக்கம், 57 சதவீதம் குறைந்துள்ளது,'' என, மத்திய சுகாதார துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறினார்.
டில்லியில் நேற்று, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறியதாவது:எம்.எம்.ஆர்., எனப்படும், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் தட்டம்மை போன்ற நோய்கள், குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளன. குழந்தைகள் இறப்பு விகிதம், புதிதாக, எச்.ஐ.வி., நோய்த்தொற்று போன்றவை, 57 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
தொடர்ந்து, 2 ஆண்டுகளாக, புதிதாக யாருக்கும், போலியோ நோய் பாதிப்பு இல்லை. போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இப்போது தான், முதல் முறையாக, இரண்டு ஆண்டுகளுக்கு நோய் பாதிப்பு இல்லாமல் இருந்துள்ளது.அதுபோல, எச்.1.என்.1., நோய் தொற்று சவால்களை எதிர்கொள்ள, பொது சுகாதார முறையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, இந்தப் பணிகளில், ஐ.சி.எம்.ஆர்., மற்றும் சில முன்னணி நிறுவனங்கள், சிறப்பாக செயல்படுகின்றன.
மருத்துவ துறையில், செவிலியர் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை பட்டமேற்படிப்பு இடங்கள், முறையே, 40 மற்றும் 80 சதவீதம் அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டில், இது, முறையே, 50 மற்றும் 100 சதவீதம் உயர்த்தப்படும்.சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் பல சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், ஏராளமான கிராமங்களில் அந்த வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது, உண்மையில் வருத்தத்திற்குரியது. ஏராளமானோருக்கு, அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலை உள்ளது.இவ்வாறு, அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.