உத்தாஹ்: அமெரிக்காவின் உத்தாஹ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 6 வயது மாணவன் ஒருவன் பள்ளிக்கு கைத்துப்பாக்கி உடன் வந்தது அனைவரிடமும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குண்டுகள் நிரப்பப்படாமல் இருந்த அந்த துப்பாக்கியை அம்மாணவன் சக மாணவர்களிடம் காட்டி உள்ளான். பயம் காரணமாக மாணவர்கள் யாரும் அதனை வெளியே சொல்லவில்லை. விபரம் அறிந்த ஆசிரியர் துப்பாக்கியை கைப்பற்றி அம்மாணவனை விசாரித்த போது, பாதுகாப்பிற்காக துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் செல்லுமாறு பெற்றோர்கள் கூறியதாக தெரிவித்துள்ளான். கனெக்டிகட் பள்ளியில் நடைபெற்ற துயரத்திலும், அதிர்ச்சியிலும் இருந்து அமெரிக்க மக்கள் வெளியே வராத நிலையில் இப்படி ஒரு சம்பவம் நேர்ந்துள்ளது அனைவரையும் மேலும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.