லோக்சபாவில் இன்று தாக்கலாகிறது இடஒதுக்கீடு மசோதா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கலாகிறது. ராஜ்யசபாவைத் தொடர்ந்து, லோக்சபாவிலும் இம்மசோதாவை நிறைவேற்ற அரசு தயாராகி வருகிறது. அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சமாஜ்வாடி கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ராஜ்யசபாவில் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், எதிரெதிர் துருவங்களாக இருந்து இம்மசோதாவை எதிர்த்தும், ஆதரித்தும் வந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 206 ஓட்டுகளும், எதிராக 10 ஓட்டுகளும் கிடைத்தன. ராஜ்யசபாவில்ல் சமாஜ்வாடி உறுப்பினர்களின் எண்ணிக்கை 9. பகுஜன் சமாஜ் கட்சியினரின் எண்ணிக்கை 15 ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே இம்மசோதாவை நிறைவேற்றுவதில் பகுஜன் சமாஜ் கட்சி கடும் முயற்சி செய்து வந்தது. மாநிலத்தில் ஆட்சியை சமாஜ்வாடியிடம் பறிகொடுத்த நிலையில், தங்களது ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள மாயாவதிக்கு இந்த மசோதா மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே வேளையில், உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவார்கள் என முலாயம் கவலைப்படுகிறார்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மத்திய அரசு சி.பி.ஐ.,யை காட்டி சமாஜ்வாடி கட்சியை மிரட்டி வருவது தொடர்கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போன்ற ஒரு மிரட்டலை, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரத்திலும் மத்திய அரசு கையாண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாடி தலைவர் முலாயம் மற்றும் அவரது மகனும், உ.பி., முதல்வருமான அகிலேஷ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில், இம்மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. உறுப்பினர்களின் விவாதத்தையடுத்து, இன்று மாலை மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்படும் என தெரிகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - Chennai,இந்தியா
19-டிச-201212:18:01 IST Report Abuse
sethu யூதர்கள் அதாவாது இன்றைய ஜெர்மனி, இந்திய அறிவாளிகளும், நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவை பலம் உள்ள நாடாக மாற்றியுள்ளனர். ஆனால் நமது நாடு இன்னும் கீழிரக்கப்படுகிறது. திறமை பின்னுக்கு போய்க்கொண்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
19-டிச-201211:36:15 IST Report Abuse
ஆரூர் ரங நாட்டின் எதிர்காலத்தையே மாற்றப்போகும் இத்தகைய சட்டங்களைப் பற்றி முதலில் பொதுமக்களிடையே கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும். பொது வாக்கெடுப்பும் அவசியம். அவசரப் பட்டு அரைகுறையாக நிறைவேற்றினால் பல ஆபத்தான நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாவோம். அவை பெரும்பாளாலும் சரி செய்யப்படமுடியாத வரலாறுப் பிழைகளாகி விடும். பின்னர் நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றுவது கடினம். தாழ்த்தப்பட்டோருக்கு சிறந்த இலவசப்பயிற்சி அளித்து அவர்களது செயல் திறனை மற்றவர்களுக்கு இணையாகக் கொண்டு வந்து பிறகு சலுகைகள் தேவையா என ஆராயலாம். திறமையற்ற நிர்வாக திறமையற்ற பொது சேவைக்கே அடித்தளம் உருவாக்கும் .அரசு நிர்வாகிகளுக்குள் நடக்கப்போகும் நானா நீயா சண்டை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. தேசபக்தி தேவை ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்