புதுடில்லி : டில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பார்லிமென்ட்டில் இன்று விளக்கம் அளித்தார். ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது : டில்லியில் வாகனங்களை கண்காணிக்க கூடுதல் ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். வாகனங்கள் அனைத்தும் விளக்குகள் வெளிச்சத்திலேயே இயக்கப்படும். டில்லி பஸ்களில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டவும், ஜன்னல் திரைகள் இடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது; அனைத்து பஸ்களிலும் டிரைவரின் நம்பர் மற்றும் லைசென்ஸ் ஆகியன ஒட்டப்படும்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு 30 நாட்களுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு ஷிண்டே தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.