சென்னை: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, போலீஸ் உயர் அதிகாரிகள் இணையற்ற பணியாற்ற வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்ற முதல் நாள் கூட்டத்தின் போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும், உள்நாட்டு பாதுகாப்பில் கலெக்டர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டிய ஒருங்கிணைப்புக்கான அவசியம் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.
இந்தியாவிலேயே தமிழக காவல் துறை பல்வேறு விஷயங்களில் முதலிடத்தில் இருப்பதை நாம் பெருமையோடு சொல்லி கொள்ளலாம். கடந்த 1991 ம் ஆண்டு தமிழக காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டுதான் 2001-ம் ஆண்டு மத்திய அரசு இதே போன்ற திட்டங்களை அறிமுகம் செய்தது. இதே போல், கடந்த 1992 ம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவங்கும் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக கடந்த 1994 ம் ஆண்டு கடலோர பாதுகாப்பு படை துவங்கப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு இதே போன்று திட்டம் துவங்கி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
கடந்த 2002 ம் ஆண்டு "அவசர விபத்து மீட்பு மையங்கள்'', நெடுஞ்சாலைகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் புதிய திட்டம் ஆகியவை துவக்கப்பட்டன. தற்போதும், காவல் துறையில் நவீன திட்டங்களை அறிமுகப்பட்டு வருகின்றன. இந்தாண்டு போலீஸ் கேண்டீன்கள் துவங்கப்பட்டுள்ளன. போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதுபோல போலீசாருக்கு "உங்கள் சொந்த இல்லம்'' பெயரில் 36 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் வாகனங்கள், ஆயுதங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. போலீசாருக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவை அலவன்ஸ், சீருடை அலவன்ஸ் உள்பட அனைத்து வகை தினப்படிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சட்டசபையில் "தமிழ்நாடு காவல் துறையில் இளைஞர் படை'' உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளேன். இவை அனைத்துக்கும் மேலாக மாநிலத்திற்கு வெளியில் இருந்து தீய சக்திகள் ஊடுருவாமல் இருக்கும் சூழ்நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் திறமையான கட்டுப்பாடான காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இங்கு வந்துள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் தங்களது இணையற்ற பணியை ஆற்ற வேண்டும்" என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.