E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 டிச
2012
01:41
பதிவு செய்த நாள்
டிச 19,2012 23:31

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர்.பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...
* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
20-டிச-201210:47:18 IST Report Abuse
dori dori domakku dori திரு .பக்தவட்சலதிருக்கு பிறகு - பதவிக்கு வந்த 2 கட்சிகளும் செஞ்ச வேலை இது . இது என்ன போல பெருசுங்களுக்கு நல்லா தெரியும்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
m.purushothaman - chennai,இந்தியா
20-டிச-201210:16:58 IST Report Abuse
m.purushothaman +12 படிக்காமல் திறந்த நிலை பல்கலை கழகத்தில் படித்தவர்களுக்கும் +12 பொது தேர்வு எழுதி கல்லூரியில் படித்தவர்களுக்கும் சம உரிமைனா +11,+12 தவையே கிடையாதே எல்லாரும் ITI டிப்ளமோ படிச்சுட்டு திறந்த நிலை பல்கலை கழகத்திலேயே பட்டப் படிப்ப படிக்கட்டும் எதுக்கு +12 பொது தேர்வு மற்றும் நேரடி முழு நேரக் கல்லூரி படிப்பு சொல்லுங்க நண்பர்களே.
Rate this:
9 members
0 members
10 members
Share this comment
Cancel
kannamani - bangalore,இந்தியா
20-டிச-201210:08:34 IST Report Abuse
kannamani இந்த அரசு ஆணை எந்த வெப்சைட்ல் கிடைக்கும் ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Selvaraj Ramesh - Singapore,சிங்கப்பூர்
20-டிச-201209:27:56 IST Report Abuse
Selvaraj Ramesh இது மாதிரி அரை குறை படித்தவர்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லி தர முடியும். இது ஏன் அரசுக்கு புரியவில்லை. இது மாதிரி செயல்களால்தான் அரசுப் பள்ளியின் தரம் தாழ்ந்து விட்டது.
Rate this:
8 members
0 members
11 members
Share this comment
Cancel
ponnuraj - tirupur,இந்தியா
20-டிச-201209:08:35 IST Report Abuse
ponnuraj இப்படிதான் இரூக்கனும் ஆட்சி.
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
Indhu Priya - Madurai,இந்தியா
20-டிச-201208:45:02 IST Report Abuse
Indhu Priya தாழ்த்த பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற பட்டதன் அடுத்த கட்டமா இது?.ஜாதி வெறி இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
Rate this:
5 members
0 members
4 members
Share this comment
Cancel
ponnuraj - tirupur,இந்தியா
20-டிச-201208:38:26 IST Report Abuse
ponnuraj சபாஷ் இதுதான் ஜெயா பாலிசி .வாழ்க ஜனநாயகம் .
Rate this:
3 members
0 members
3 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
20-டிச-201207:41:52 IST Report Abuse
Guru அப்படியோ.., ஒருவழியா ரொம்ப வருஷத்திற்கு அப்புறம் எப்படி ஒரு ஆணை கிடைத்து இருக்கிறது
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
20-டிச-201207:01:04 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஒன்பதாம் வகுப்பே தாண்டாமல் போலி டாக்டர் பட்டம்வாங்கி, பல கோடி கொள்ளையடித்து, அடுத்தவர் மனைவி முதலாக அனைத்தையும் ஆட்டாயப்போட்டவ்ர்கள், ஒழுக்ககேட்டையே வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள் அரசியல்வாதிகளாக வலம் வரும்போது சுமாராகப் படித்த்தவர்கள் அரசு அலுவலரானால் என்ன? எல்லாம் மால் வாங்கத்தானே/
Rate this:
7 members
1 members
7 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
20-டிச-201204:06:13 IST Report Abuse
NavaMayam படிப்பே இல்லாமல் அரசு மந்திரி பதவியில் இருக்கும் போது இது சரிதான் ...ஒரு கண்ணில் வெண்ணையும் , ஒரு கண்ணில் சுண்ணாம்பும் அம்மா ஆட்சியில் இல்லை ...மக்களே சுண்ணாம்புதான் ...
Rate this:
5 members
0 members
22 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.