TN will use Goondas Act to curb cyber crime | ஒரு குற்றம் புரிந்தாலே "குண்டாஸ்': | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு குற்றம் புரிந்தாலே "குண்டாஸ்':

Updated : டிச 20, 2012 | Added : டிச 19, 2012 | கருத்துகள் (125)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஒரு குற்றம் புரிந்தாலே "குண்டாஸ்':

சென்னை: "பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு குற்றம் புரிந்தாலே, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றம் புரிவோர், குற்றம் புரிவதையே, தங்கள் பழக்கமாக கொண்டிருப்பவர்கள் மற்றும் நில மோசடி, தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதை கடத்தல் மற்றும் உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இச்சட்டத்தின் கீழ், தண்டனை பெறுவோர், ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது. தமிழகத்தில், சமீபத்தில், பல்வேறு வழக்குகளில் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரவுடிகளை ஒழிப்பதற்கு, குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில், குண்டர் சட்டத்தில், புதிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.இதன் படி, கம்ப்யூட்டர் வழி குற்றம்; வாகனப் பறிப்பு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் தவிர, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு குற்றம் புரிந்திருந்தாலே, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும், குண்டர் சட்டத்தின் கீழ், ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அவர் மீதான வழக்குகள் குறித்த அறிக்கை தயாரிக்க, இதுவரை போலீசுக்கு வழங்கப்பட்டு வந்த, 3,000 ரூபாய், 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hafeez - Ilayangudi,இந்தியா
22-டிச-201202:01:42 IST Report Abuse
hafeez ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் ,காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த சட்டம் கிடையாது. எதிர் கட்சி காரர்களுக்கு மட்டும் உடனே பாயும். இளையான்குடி ஒன்றிய செயலாளர் அழகுசுப்பு என்ற திருட்டு பயலும் அவர் மகன் ராஜேந்திர குமார் என்றார் காவல் துறை அதிகாரியும் சேர்ந்து 15 ஏக்கர் நிலத்தை அபகரிக்க போலி பத்திரம் தயாரித்த வழக்கு எந்த வித விசாரணையுமின்றி பல வருடங்களாக கிடப்பில் உள்ளது .அனல் எதிர் கட்சி காரர்களுக்கு உடனே குண்டாஸ் பாய்கிறது இது என்ன நியாயம் என தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21-டிச-201201:51:31 IST Report Abuse
GUNAVENDHAN சமூக அமைதிக்கு பங்கம் வருகின்ற அளவுக்கு குற்றம் புரிந்தவர்கள், சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து குற்றம் புரிகின்றவர்களை குண்டாஸ் இல் போடுவதில் ஒன்றும் தப்பே இல்லை. அடுத்தவன் நிலத்தை, வீட்டை, குறிவைத்து போலியான ஆவணங்களை தயாரித்து, அபகரித்து கொள்பவனை எல்லாம் கட்டாயம் இந்த குண்டாஸ் சட்டத்தில் சேர்த்து லாடம் கட்ட வேண்டும். அடுத்தவன் சொத்தை ஏப்பம் விட நினைப்பவன்,. அவன் வந்து நியாயம் கேட்டால் , கை ஆட்களை வைத்து , குண்டர்களை வைத்து மிரட்டுவது, அச்சுறுத்துவது, அடித்து விரட்டுவது போன்ற அய்யோக்கியத்தனமான வேலைகளை செய்து கொண்டிருப்பவர்களை வெளியே விட்டு வைத்திருந்தால், பொது அமைதிக்கு பங்கம் வந்துவிடும். எனவே இது போன்ற கேடிபசங்களை குண்டாசில் தூக்கி உள்ளே போடுவது தான் சரி. ஆனால் போலீஸ் சட்டத்தை அமுல் செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்படவேண்டும். குற்றம் செய்தவனிடம் கை நீட்டி வாங்கிகொண்டு, தப்ப விடுவதும் மிகப்பெரிய குற்றமாக கருதவேண்டும். குற்றம் செய்தவனிடம் அடிபணிந்து , பாதிக்கபட்டவன் மேலேயே பொய் வழக்கு போட்டால் , அதையெல்லாம் மிகப்பெரிய குற்ற பட்டியலில் சேர்க்கவேண்டும். இப்படிப்பட்ட குற்றம் இழைத்த அதிகாரிகளையும் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும். சட்டம் கர்டுமையாக இருந்தால்தான் நாட்டில் குற்றங்கள் குறையும். அதே சமயத்தில் போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யாத யாரையும் , வீணாக இச்சட்டத்தில் சிக்க வைத்துவிடக்கூடாது. உண்மையாகவே கடுமையான குற்றம் இழைத்து உள்ளான் என்பதை நன்கு ஊர்ஜிதம் செய்துகொண்டு தான் இச்சட்டத்தை பயன்படுத்த வேண்டும். போலீஸ் அதிகாரிகள் ஒருவன் மீது இப்படிப்பட்ட குற்றத்தை சுமத்தி குண்டாசில் போட மாவட்ட ஆட்சிதளைவர்களிடம் அனுமதி கேட்டு கோப்பை அனுப்பும் போது, அதை ஒழுங்காக visaariththu paarkkaamal அனுமதி koduththuvidakkoodaadhu . ovvoru vazhakkilum muzhumaiyaana visaaranaikku pinbe அனுமதி kodukka வேண்டும் . குண்டாஸ் சட்டத்தை payanpaduththum போது indhalavukku jaakkiradhaiyaaga irundhu செயல்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
21-டிச-201200:29:17 IST Report Abuse
babu சர்வாதிகாரி நினைப்பு தான், தனக்கு கைது என்கிற போது மாணவிகளின் பஸ் யாரால் கொழுத பட்டது, அடக்கு முறைகள் முறையில்லாமல் வந்தால் நாடு கொந்தளிக்கும்,
Rate this:
Share this comment
Cancel
jafar - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-டிச-201200:12:17 IST Report Abuse
jafar நாட்டுல அம்மா குண்டாசுல தண்டிக்கணும் .. அப்பத்தான் நாடும் வீடும் ஒழுங்காகும்
Rate this:
Share this comment
Cancel
Kalignardaas - Thiruvannamalai,இந்தியா
20-டிச-201215:39:03 IST Report Abuse
Kalignardaas கலைஞர் அய்யா இது போல ஒரு நாளும் செய்ய மாட்டார். அவர் மனித குல மாணிக்கம். தமிழக மக்கள் கருணாநிதி அய்யா வை போல் உத்தமர்கள் கிடைத்ததற்காக கடவுளிடம் நன்றி கூற வேண்டும். கலைஞர் அய்யா vaazhga
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
20-டிச-201215:30:08 IST Report Abuse
T.C.MAHENDRAN தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியில் "குண்டாஸ்': ,"கருணாஸ் " என்று ஒரே காமெடி தான்
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
20-டிச-201215:27:10 IST Report Abuse
T.C.MAHENDRAN தி.மு.க.வினர் மீது போடப்பட்ட அனைத்து குண்டாசும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி விட்டதால்தான் அம்மாவுக்கு இந்த ஆவேசம் .
Rate this:
Share this comment
Cancel
Kalignardaas - Thiruvannamalai,இந்தியா
20-டிச-201215:19:49 IST Report Abuse
Kalignardaas கலைஞர் அய்யா தமிழகத்தின் தெய்வம் அய்யா. ஒரு நாளும் குண்டாஸ் போன்ற சட்டத்தை பயன் படுத்தியது இல்ல. அவர் ஒரு மிக சிறந்த மனிதர். மனிதருள் மாணிக்கம். அவர் ஆட்சி காலத்தில் குண்டாஸ் போன்ற சட்டம் தேவை இல்லை. அவர் காலத்தில் அன்பு ஆறாக ஓடியது.
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
20-டிச-201213:48:26 IST Report Abuse
Appavi Tamilan சொத்துகுவிப்பு வழக்கில் பொய்களாக சொல்லி வாய்தா வாங்கி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வாய்தா ராணிக்கு இந்த சட்டம் பொருந்துமா? தமிழகத்தை சுரண்டி சூறையாடும் முன்னாள் () வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலா, ராவணன்,வெங்கடேஷ், இளவரசி போன்ற கொள்ளை கும்பல் மீது இந்த சட்டம் பாயுமா? பாலியல் பரஞ்சோதி முதல், உண்மையான நில அபகரிப்பு புகாரில் மாட்டியுள்ள தம்பிதுரை உள்ளிட்ட அடிமை அமைச்சர்கள் மீது இந்த சட்டம் பாயுமா? சென்னை நகரை நாறடித்து, மாநகராட்சி நிதியை சூறையாடும் அராஜக அதிமுக கவுன்சிலர்கள் மீது இந்த சட்டம் பாயுமா? மக்களுக்கு மூன்று மாதத்தில் மின்சாரம் தருவதாக கூறி ஏமாற்றி இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கஞ்சித்தொட்டி ராணி மீது இந்த சட்டம் பாயுமா? எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட்டு மக்கள் பணத்தை வீணாக்கும் கொடிய சக்திக்கு இந்த சட்டம் பொருந்துமா? நியாயமாக இந்த நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் லிஸ்டில் முதல் ஆளாக கொடிய சக்திதானே இருப்பார். எல்லாவற்றுக்கும் மேல் இந்த அரசின் குறைகளை உரிமையோடு சுட்டிக்காட்டும் ஊடகங்கள் மீதும் இந்த சட்டம் பாயுமா ?
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
20-டிச-201213:38:43 IST Report Abuse
christ செந்தில் பாலாஜி மீது புகார் கூறப்படுகிறது , செந்தில் பாலாஜி மீது குண்டாஸ் பாயுமா ? முதல் பிள்ளையார் சுழி அ. தி . மு . க விலிருந்து ஆரம்பம் ஆகுமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை