மின் மீட்டர் பற்றாக்குறை தொடர்வதால் கடும் அவதி: ரூ. 1000 கோடி ஒதுக்கியும் வீண்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மின் மீட்டர் பற்றாக்குறையால், புதிய மின் இணைப்புகள் வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதான மீட்டர்களை மாற்ற, மீட்டர்கள் இல்லாததால், நுகர்வோரிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மும்முனை மின்சாரம்ஒரு முனை, மும்முனை இணைப்பு என, வீடுகளுக்கு, இரண்டு விதமான மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய இணைப்பு கேட்டுவிண்ணப்பிக்கும் நுகர்வோரிடமிருந்து, வைப்புத் தொகை பெற்று, மின் பகிர்மானக்கழகமே, மீட்டரை வழங்கிவருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, மின் பகிர்மான கழகத்திடம், போதிய மீட்டர்கள் இல்லாததால், புதிய இணைப்புகளுக்கு, மீட்டர் வழங்க முடியாமல், இணைப்புகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன.மீட்டர் பற்றாக்குறையால், புதிய இணைப்புக்கு விண்ணப்பித்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், பழுதான மீட்டர்களுக்கு பதில், புதிய மீட்டர்கள் பொருத்துவதில் ஏற்படும் காலதாமதத்தால், நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஒவ்வொரு மின்வாரியவட்டத்திலும், 1,000க்கும் மேற்பட்டோர் பழுதான மீட்டர்களுக்கு, புதிய மீட்டர் கேட்டும், 200க்கும் மேற்பட்டோர், புதிய இணைப்புகளுக்கான மீட்டர்களுக்காவும் காத்திருகின்றனர்.மின்வாரியம் அங்கீகரித்த நிறுவன மீட்டர்களை, கடைகளுக்கு வாங்க பொதுமக்கள் சென்றால், "தற்போது மீட்டர்கள் இல்லை; மீட்டருக்கான பணத்தை செலுத்தினால், மீட்டர் வாங்கிக் கொடுக்கப்படும்'என்கின்றனர்.பணத்தை செலுத்தி, காத்திருந்து மீட்டரை பெற்றாலும், அதை சோதனை செய்து, வாரியம் சான்று வழங்குவதற்கு நீண்ட காலமாகிறது என, கூறுகின்றனர்.இதுகுறித்து, சென்னைவளசரவாக்கத்தை சேர்ந்தசந்தானம் கூறியதாவது:தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்கு முறை ஆணைய விதிப்படி, விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். தற்போது, வாரியம் இந்த விதிமுறையை கடைப்பிடிப்பதில்லை.மீட்டர் பழுது குறித்து, எழுத்து மூலமும், நேரிலும் புகார் செய்தாலும், பழுது நீக்கப்படுவதில்லை.மீட்டர் பழுதால், மின் பயன்பாட்டுக்கான கட்டணத்தை, சராசரியாக கணக்கீட்டு வசூலிக்கின்றனர். ஓராண்டில் உள்ள கணக்கீட்டை, சராசரியாககணக்கீட்டு, கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.இதனால், அதிக கட்டணம் வருகிறது. வெயில் காலங்களில் அதிக மின் பயன்பாடு இருக்கும்; மற்ற நேரங்களில் குறைவு தான்; இதை வைத்து, கணக்கிடுவது சரியானதல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.பொதுமக்களின் புகார் பற்றி, மின் வாரிய பொருட்கள் கையாளும் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு ஆண்டுக்கும் மேலாக, மின் மீட்டர் தட்டுப்பாடு உள்ளது. இதை போக்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவன மீட்டர்களை, வெளி சந்தையில் வாங்கலாம் என, வாரியம் அறிவித்தது.இருப்பினும், கடைகளில் வாங்கும் மீட்டர்களை சோதனை செய்து, பொதுமக்களுக்கு திரும்ப வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் வழங்கும் மீட்டர்களை சோதனை செய்து, உடனே திருப்பி அளிக்க, போதியஊழியர்கள் இல்லை.பழுதான மீட்டர்களுக்கு பதில், புதிய மீட்டர்களை வழங்கவும், மீட்டர்கள் கையிருப்பில் இல்லை. சில மாதங்களாகமீண்டும், மீட்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.மீட்டர் பற்றாக்குறையால், புதிய இணைப்புகளை நிறுத்தி வைத்துள்ளோம். வட்டத்திற்கு, 1,000க்கும் மேற்பட்டோர் பழுதான மீட்டர்களுக்கு பதில், புதிய மீட்டர்கள் கிடைக்காமல்உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.கொள்முதல்இதற்கிடையே, மீட்டர் பற்றாக் குறையைப் போக்க, புதிய கொள்முதலுக்கு, அரசு, 1,000ம் கோடி ரூபாயை, 2012 - 13ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கியது. இத்தொகை, மின்வாரியத்துக்கு அளிக்கப்பட்டு, மீட்டர் கொள்முதலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, மின் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
20-டிச-201210:49:15 IST Report Abuse
Sundeli Siththar யார் யார் எவ்வளவு ஒதுக்கினான்களோ... யாருக்கு தெரியும்?
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
20-டிச-201210:48:54 IST Report Abuse
Sundeli Siththar மீட்டர் எதுக்கு.. பாதி நேரம் கரெண்டே இல்ல என்று விட்டுவிட்டிருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Arun Ra - Chennai,இந்தியா
20-டிச-201210:31:54 IST Report Abuse
Arun Ra All the problems due to the officers those who are working for EB dept for the past 10 years, they didnt plan for anything.....they are the one spoil both the govt names....the officers should be punished....
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
20-டிச-201207:38:09 IST Report Abuse
Giri Srinivasan ஆம் ஆத்மி போல மீட்டரைஎல்லாம் எடுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
20-டிச-201205:38:40 IST Report Abuse
Samy Chinnathambi ஆமா இப்ப மீட்டர் கொடுத்தா மட்டும் கரண்டு வர போகுதா? விடுங்க கொஞ்ச வருசத்துக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு உபயோக படுத்துங்க...
Rate this:
Share this comment
Suresh Krish - Chennai,இந்தியா
20-டிச-201208:40:51 IST Report Abuse
Suresh KrishHello fris, for my house suddenly EB meter runs fast as per day 15 units. Totally i'm getting 900 units for 2 months. This is due to EB meter fault. Previously my usage was 5 units per day with 300 units for 2 months. Due to the failure in EB meter, for 900 units i have to pay Rs. 4140. I'm in rental house or Rs. 5000 per month. But when i gave a complaint to EB office, they are saying that your wife might be running fan, TV & lights continuously throughout a day. They didnt accept my complaint, so i have to fight for justice. Finally after 6 hours qualling & proving some technical calculations, they accepted the complaint & told me that new EB meter will be replaced after 4 - 6 months. Until then i have to pay what it is coming...Such a worst statement from EB officers. So i'm going to shift back to my native village, due to this EB meter failure. Very bad & ashamed to stay in Tamil Nadu....
Rate this:
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
20-டிச-201210:43:29 IST Report Abuse
Samy ChinnathambiHello fri suresh... Your decision to shift back is alright but you have to do something to payback to this useless government administration. If people are not appose then they won't do anything. ஒரு எலெக்ட்ரிக் மீட்டரை கொடுப்பதற்கு ஆறு மாசம் எடுக்கும் அரசு இயந்திரமே நீ தேவை தானா என்று அதிமுக தலைமை அலுவலகத்தி சுவற்றில் ஒரு நாலு போஸ்டரை அடிச்சு ஒட்டியாவது உங்க எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.......
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
20-டிச-201204:21:05 IST Report Abuse
NavaMayam என்னது , மணல் பற்றாகுறை , மின்சாரம் பற்றாக்குறை , மீட்டார் பற்றாக்குறை ...தண்ணீர் பற்றாக்குறை , நிர்வாக பற்றாக்குறை , குறை மாசத்தில் பிறந்த குழந்தை மாதிரி ஆயிரிச்சே தமிழகம் ... கஷ்ட படுதே , தேறுமா ...
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
20-டிச-201203:56:23 IST Report Abuse
மோனிஷா ரூபாய் 2000 கையூட்டு கொடுத்தால் இணைப்பு உடனே கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
20-டிச-201203:42:06 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை மீட்டர்னால மின்னல் மாதிரி வந்துட்டு போற கரண்டுக்கு இடி மாதிரி வருது பில்லு , இந்த மீட்டர்கள ஒழிக்க சீமான் போராடுவாரா ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201203:27:04 IST Report Abuse
தமிழ்வேல் மின் மீட்டரை தேவையான அளவிற்கு உற்பத்தி செய்யவோ அல்லது மற்ற மாநிலங்களிலிருந்து தருவிக்கவோ இறக்குமதி செய்து விநியோகிக்கவோ நமக்கு திறமை இல்லாமலா போய்விட்டது ? பலவற்றிற்க்கும் நொந்து போயிருக்கும் மக்களை எதனால் இதுபோன்ற சுலபமான விஷயங்களுக்கும் அலைக்கழிக்க வேண்டும் ? தேவையான மின்சாரம்தான் இல்லை..... மின் மீட்டராவது தரக் கூடாதா ?
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
20-டிச-201202:16:07 IST Report Abuse
Loganathan மின் மீட்டர்கள் வெளி மாநிலத்தில் தாரளமாக கிடைக்கிறது. அதை வாங்கிகொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-டிச-201203:57:51 IST Report Abuse
மதுரை விருமாண்டிலஞ்சத்தை இங்கு தான் தர வேண்டும்.., ஓ.கே வா ??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்