சமயத்தில் கைகொடுக்கும் காற்றாலை மின்சாரம் : மின் உற்பத்தி அதிகரிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்று தாழ்வழுத்த நிலை காரணமாக, நான்கு நாட்களாக, காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு நாட்கள் இந்நிலை தொடரும் என எதிர்பார்ப்பதாக, இந்திய காற்றாலைகள் அமைப்பின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில், 14 முதல், 18 நேரம் வரை, கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாத துவக்கம் முதல், நவம்பர் மாத இறுதி வரை, காற்றாலைகள் மூலம், 1,000 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.இதன் மூலம் மொத்தம், 4,600 கோடி யூனிட்டில், 22 சதவீதம், காற்றாலை மின் உற்பத்தி மூலம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை காலை, 1,000 மெகாவாட் மின்சாரமும், மாலை, 2,000 மெகாவாட் மின்சாரமும், உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் மொத்த அளவு, 21 கோடி யூனிட். அதில் 3.6 கோடி யூனிட் காற்றாலை மூலம் கிடைத்துள்ளது. கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, காற்று அதிகரித்துள்ளது. நேற்று காலை, 1,200 மெகாவாட் மின்சாரமும், மாலை, 1,990 மெகாவாட் மின்சாரமும், காற்றாலை மூலம் கிடைத்தது. கடந்த, 2011 ஆண்டு, ஏப்ரல் - நவம்பர் மாதங்களில், 6,50 கோடி யூனிட் கிடைத்தது. இந்தாண்டு, 54 சதவீதம் அதிகரித்துள்ளது.தற்போதுள்ள நிலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் வாய்புள்ளது என்பது மகிழ்ச்சியானது. இதுபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உதவி வருகிறது. ஆனால், கடந்த, 14 மாதங்களாக மின் உற்பத்தி கட்டண தொகை, 3,500 கோடி ரூபாய் செலுத்தாமல் இருப்பது. வேதனைக்கு உரியது. தேவைக்கு உதவும் காற்றாலை ஊழியர்களுக்கான தொகையை. உடனடியாக வழங்க போதிய நடவடிக்கையை தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
21-டிச-201212:46:30 IST Report Abuse
R.Saminathan என்னதான் சொல்லுங்க கிராம புறங்களில் கடும் மின் வெட்டு உள்ளது அந்த குறை தீரணுமா தமிழகத்துல இன்னும் எத்தன வருஷம் ஆகுமோ தெரியல.
Rate this:
Share this comment
Cancel
neelakantan s - mumbai,இந்தியா
21-டிச-201200:12:13 IST Report Abuse
neelakantan s பசியால் தவித்து கொண்டு இருப்பவனுக்கு ஒரு அவல் பொரி
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
20-டிச-201207:45:32 IST Report Abuse
Giri Srinivasan இதிலிருந்து உண்மை புரிகிறதா மக்களுக்கு நன்மை செய்யும் அனைவருக்கும் இதுதான் கதி ??? அடுத்து அவங்க போராட்டம் செய்யனும், அப்போதும் தூங்கும் 1
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
20-டிச-201207:40:43 IST Report Abuse
Guru வாயு பகவன் கருணை ரொம்ப தேவைன்னு நெனைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
20-டிச-201206:20:43 IST Report Abuse
villupuram jeevithan திமுக ஆட்சியை விட்டு விட்டு செல்லும்போது ஒன்பது மாத பாக்கியை வைத்துவிட்டு சென்றுல்லாறே? அந்த பாக்கி தான் அடைபட்டுக் கொண்டிருக்கிறது. 15.04.2011 News: April 15, 2011: Wind energy producers in the State have appealed to the Tamil Nadu Generation and Distribution Corporation to expedite disbursement of payment arrears for energy supplied to the grid. K. Kasthurirangaian, chairman of the Indian Wind Power Association, told The Hindu here on Saturday that the windmill owners in southern districts had not received the amount for the last eight months and those in Coimbatore region for the last nine months, for energy supplied to the grid during the last nine months.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
20-டிச-201204:14:50 IST Report Abuse
NavaMayam பலத்த காற்றில் அரசமரமே வேரோடு சாயும் ... காற்று அடிக்காமயே இந்த அரசு வேரோடு சாய்ந்திரும் போல இருக்கே ...மரம் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வேரு வீக்கு ...ஒரே ஆணி வேர் , மற்ற ஆணி எல்லாம் வேஸ்ட் ....
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
20-டிச-201203:47:30 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை அப்போ இனி கரண்டு வருமா வராதாங்கரத வானில அறிக்கையா ரமணன் தான் சொல்லுவாரு. இந்த ரமணன், ஞான தாத்தா டெண்டுல்கர், சூப்பர் தாத்தா ரஜினி இவங்களுக்கெல்லாம் ரிடையர்மென்டே கிடையாதா ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201202:45:54 IST Report Abuse
தமிழ்வேல் // இதுபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உதவி வருகிறது. ஆனால், கடந்த, 14 மாதங்களாக மின் உற்பத்தி கட்டண தொகை, 3,500 கோடி ரூபாய் செலுத்தாமல் இருப்பது. வேதனைக்கு உரியது. // இதுபோல் செய்வதால் பலர் இதில் முதலீடு செய்ய மாட்டார்கள்...சூரிய மின்சாரமும் இதுபோல முடிய வாய்ப்புள்ளது... உபரி சூரிய மின்சாரத்தை அரசு பெற்றுக்கொள்வதாக கூறிவிட்டு சிலவருடங்கள் சென்று பணத்தை தராவிடின் என்னவாகும் ? இதற்க்கு அடுத்தவர் ஆட்சிக்கு வந்து கிடப்பில் போட்டுவிட்டால் என்ன செய்வது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்