Advertisement
மரக்கன்றுகளை நடுங்கள்;தற்கொலையை வெல்வோம் : மூன்று சக்கர சைக்கிளில் மாற்று திறனாளி பிரசாரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2012,00:16 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 20,2012,04:59 IST

சிவகாசி: மழை வேண்டி "மரக்கன்றுகள் நடுங்கள், தற்கொலையை வெல்வோம்' என்ற கோஷத்துடன், மூன்று சக்கர சைக்கிளில்மாற்றுத்திறனாளி பிரசாரம் செய்கிறார்.
இயற்கையின் மாறுபாடன காலச்சூழ்நிலையால் மழை பொய்த்து, வறட்சி, விவசாயம் பாதிப்பு என, ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்ட சூழ்நிலை உருவாகிறது. பிறப்பு என்பது, கடவுள் நமக்கு தாயின் மூலம் கொடுத்த அழகான வாழ்வு. அந்த வாழ்வு, பல போராட்டங்களை கொண்டது என உணர்ந்து, தற்கொலையை வெல்வோம் என்ற பிரசாரத்துடன், மாற்றுத்திறனாளி ஒருவர், மூன்று சக்கரவண்டியில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.திருநெல்வேலி மாவட்டடம் இட்டாமொழியை சேர்ந்தவர் நெல்சன், 29. அஞ்சல் வழி மூலம், பி.காம்., முடித்துள்ளார். பிறவியிலே நடக்க முடியாத இவர், சமூக சிந்தனையோடு, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறார். சிவகாசியில் இருந்து சென்னை வரை, பிரசாரத்தை துவக்கிய இவர், ""மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் முன், மரக்கன்றுகளை நடுவீர், மழை பெறுவீர் '' என, பிரசாரம் செய்கிறார். தினமும் 15 முதல் 20 கி.மீ.,தூரம் பயணிக்கிறார். இவர் கூறுகையில், "" 2005ல் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, 2010ல் துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளேன். படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல. படிப்பு என்பது நமதுதிறமை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு என கருத வேண்டும். ஏதோ ஒரு காலண்டர் சொல்லும் கட்டு கதையை நம்பி ,உலகம் அழியும் என நம்புகின்றவர்கள், முதலில் வாழ்வதற்கு தேவையான மழை பெற, மரக்கன்றுகளை நடுங்கள், என்பதை வலியுறுத்துகிறேன்,'' என்றார். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது, பிரசார பயணத்தை துவக்கி வைக்க வரும் வி.ஐ.பி.,க்கு,ஒரு மரக்கன்று கொடுத்து விடைபெறுகிறார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
R.Saminathan - mumbai,இந்தியா
21-டிச-201215:32:43 IST Report Abuse
R.Saminathan வாழ்த்துக்கள் எனது உயிர் தமிழரே....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
20-டிச-201211:27:56 IST Report Abuse
LAX பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Ravindran Velusamy - Chennai,இந்தியா
20-டிச-201208:09:22 IST Report Abuse
Ravindran Velusamy வாழ்த்துக்கள் நண்பா , கடவுள் உனக்கு அருள்புரிவாராக உன் பணி சிறப்பாக அமைய :)
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Partha - Bangalore,இந்தியா
20-டிச-201205:59:14 IST Report Abuse
Partha வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Senthil - Toronto,கனடா
20-டிச-201203:13:21 IST Report Abuse
Senthil வாழ்த்துக்கள் நெல்சன்..
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.